புஷ்பா படத்தை பார்ப்பவர்கள் வந்தேறிகள் என சீமான் கூறினாரா ?

பரவிய செய்தி
தெலுங்கு படமான, புஷ்பா படத்தை பார்க்கும் அனைவருமே வந்தேறிகள் -சீமான் பேச்சு. நாம் தமிழர் தம்பிகள் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும்.
மதிப்பீடு
விளக்கம்
தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், தெலுங்கு படமான புஷ்பா படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் வந்தேறிகள் என சீமான் கூறியதாக புதிய தலைமுறை சேனலின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அடேய் சீமான்..
என்னடா இதெல்லாம்..😂😂😂கேட்டுச்சா தற்குறி தம்பிகளா? pic.twitter.com/liFgMGMMVf
— S.Saravanan🖤❤️ (@sarvasupra1985) December 17, 2021
உண்மை என்ன ?
புஷ்பா திரைப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்ததாக எந்த தகவலும் இல்லை. அவருடைய சமூக வலைதள பக்கங்களிலும் அப்படி எந்த பதிவும் வெளியாகவில்லை.
அடுத்ததாக, புதியதலைமுறை செய்தியும் முகநூல் பக்கத்தில் தேடிப் பார்க்கையில், பரப்பப்படும் நியூஸ் கார்டு மட்டுமன்றி சீமான் குறித்து 17-ம் தேதி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, புதியதலைமுறை செய்தியின் இணையதள பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” இது போலியானது. நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், தெலுங்கு படமான புஷ்பா படத்தை பார்க்கும் அனைவருமே வந்தேறிகள் என்றும், நாம் தமிழர் தம்பிகள் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் சீமான் பேசியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.