This article is from Jul 22, 2020

புதியதலைமுறை கார்த்திகைச்செல்வன் பேசியதாக பரவும் தவறான பழைய ஆடியோ!

பரவிய செய்தி

புதிய தலைமுறை கார்திகை செல்வனை போனில் கதறவிட்ட இந்து!

Youtube link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

முருகபக்தர் ஒருவர் புதியதலைமுறை ஊடகத்தின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் உடன் பேசியதாக ஆடியோ பதிவு ஒன்று யூடியூப் சேனல்கள் பலவற்றில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் ஆடியோ பதிவில் இருப்பது கார்த்திகைச்செல்வன் அவர்களின் குரல் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

அதுமட்டுமின்றி, அவ்வாறான பதிவுகளில் கார்த்திகைச்செல்வனின் புகைப்படத்தை வீடியோவில் பயன்படுத்தி விட்டு, வீடியோவின் முகப்பு புகைப்படத்தில் புதியதலைமுறையின் நெறியாளர் கார்த்திகேயன் புகைப்படத்தை வைத்து இருக்கிறார்கள்.

Youtube link | archive link 

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் புதியதலைமுறையின் நெறியாளர் கார்த்திகேயனுடன் பேசிய ஆடியோ பதிவை கார்த்திகை செல்வன் உடன் நடந்த உரையாடல் என தவறாக பரப்பி வருகிறார்கள்.

இது தொடர்பாக புதியதலைமுறையின் நெறியாளர் கார்த்திகேயன் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய போது, ” இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுபுது அர்த்தங்கள் நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவத்தால் வந்த தொலைபேசி அழைப்பு. தற்போது வைரலாகி வரும் ஆடியோ வடிவிலான வீடியோக்களை நானும் பார்த்தேன் ” எனப் பதில் அளித்து இருந்தார்.

புதியதலைமுறை செய்தியில் பணியாற்றும் கார்த்திகைச்செல்வன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் ஒரே ஆள் என குழப்பிக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இது முருகன் விவகாரத்தின் போது நடைபெற்ற உரையாடல் என தவறாக பரப்பி வருகிறார்கள். இந்த ஆடியோ 2,3 ஆண்டுகளுக்கு முன்பானது.

Please complete the required fields.




Back to top button
loader