நல்லாட்சி வழங்கிய அரசு அதிமுக என பரப்பப்படும் பழைய கருத்துக் கணிப்பு !

பரவிய செய்தி
புதிய தலைமுறையில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள்: தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கிய அரசு எது?
அதிமுக – 34.48%,
திமுக – 33.33%
பதில் – அதிமுக.
ஏழைக்களின் நலனுக்காக செயல்பட்ட அரசு எது?
அதிமுக – 35.04%
திமுக – 30.96%
பதில் – அதிமுக.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதில் சிறந்த அரசு எது?
அதிமுக – 36.65%
திமுக – 29.63%
பதில் – அதிமுக.
பொதுவிநியோகத் திட்டத்தை சிறப்பாகச்
செயல்படுத்திய அரசு எது?
அதிமுக – 37.06%
திமுக – 31.52%
பதில் – அதிமுக.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு எது?
அதிமுக – 31.83%
திமுக – 27.66%
பதில் – அதிமுக.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கையில், மக்களின் கருத்துக்கள், தேர்தல் கருத்துக் கணிப்புகள், கூட்டணிகள் என ஊடகங்கள், சமூக வலைதளம் முழுவதும் தேர்தல் பரபரப்பாய் இருக்கையில், நல்லாட்சி வழங்கிய அரசு எது என புதிய தலைமுறை செய்தி நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பு என சில ஸ்க்ரீன்ஷார்ட்களும், தகவலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
நல்லாட்சியை வழங்கியது, ஏழைக்களின் நலனுக்காக செயல்பட்ட அரசு, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதில் சிறந்த அரசு, பொதுவிநியோகத் திட்டத்தை சிறப்பாகச்
செயல்படுத்திய அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு எது என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக மக்கள் அதிமுக அரசை அதிக அளவில் கூறியுள்ளதாக காண்பிக்கிறது அந்த கருத்துக்கணிப்பு.
.
உண்மை என்ன ?
.
தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கிய அரசு எது என புதிய தலைமுறை நடத்திய கருத்துக் கணிப்பு குறித்து தேடுகையில், 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய தலைமுறை செய்தி நிறுவனமும், ஆப்ட் நிறுவனமும் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்திய தகவல் கிடைத்தது.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் புதிய தலைமுறை வெளியிட்ட கருத்துக் கணிப்பு வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷார்ட்களே தற்போது அதிமுக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், 2021-ம் தேர்தலுக்கு அதிமுக, திமுக ஆட்சியை அடிப்படையாக வைத்து புதிய தலைமுறை செய்தி நிறுவனம் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதாக எந்தவொரு செய்தியும் வெளியிடவில்லை. புதிய தலைமுறை செய்தியின் முகநூல், யூடியூப் சேனல் உள்ளிட்ட பக்கங்களை ஆராய்கையில் அப்படி எந்த செய்தியும் இடம்பெறவில்லை.
.
வைரலாகும் கருத்துக் கணிப்பு தொடர்பாக புதிய தலைமுறை செய்தியின் டிஜிட்டல் எடிட்டர் மனோஜ் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், இது தற்போது எடுக்கப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்பு இல்லை என மறுப்பு தெரிவித்து இருந்தார்.
.
முடிவு :
.
நம் தேடலில், தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கிய அரசு எது என புதிய தலைமுறை செய்தி எடுத்த கருத்துக் கணிப்பில் அதிமுக அரசையே மக்கள் குறிப்பிட்டு இருந்ததாக பரப்பப்படும் ஸ்க்ரீன்ஷார்ட்கள் கடந்த 2016 தேர்தலுக்கு முன்பாக புதிய தலைமுறை வெளியிட்ட கருத்துக் கணிப்பு வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.
Advertisement