ரஷ்ய அதிபர் புதின் நேரில் சென்று இந்திய மாணவர்களை வழி அனுப்பியதாக வதந்தி !

பரவிய செய்தி
ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் நமது இந்திய மாணவர்களை அழைத்து வரும் விமானத்தில் ஏறி அவர்கள் பத்திரமாக செல்கிறார்களா என்று அக்கறையுடன் விசாரிக்கும் காணொளி.
மதிப்பீடு
விளக்கம்
உக்ரைன் போர் சூழலில் இந்திய மாணவர்கள் விமானத்தில் புறப்பட தயாராக இருக்கும் போது, ரஷ்ய அதிபர் புதின் நேரில் சென்று இந்திய மாணவர்களை விசாரித்து வழி அனுப்பி வைத்ததாக விமானத்தில் எடுக்கப்பட்ட 2 நிமிட வீடியோ ஒன்று பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவில் ET NOW எனும் செய்தி நிறுவனத்தின் லோகோ இடம்பெற்று இருக்கிறது. அந்த சேனலில் வீடியோ குறித்து தேடுகையில், ” விமான பயணத்திற்கு முன்பாக ரோமானியா நாட்டிற்கான இந்திய தூதர் ராகுல் ஸ்ரீவஸ்தவா இந்தியர்களுடன் பேசுவதாக ” பிப்ரவரி 26-ம் தேதி இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது.
“Whenever you face difficulty in life, remember this day & everything will be fine” – Listen in to India’s Ambassador to #Romania Rahul Shrivastava’s special message to Indian nationals onboard #AirIndia flight@AmbShrivastava @DrSJaishankar @sameerdixit16 #Ukraine #Evacuation pic.twitter.com/jfSm5Ev1ZZ
— ET NOW (@ETNOWlive) February 26, 2022
மேலும், பிப்ரவரி 26-ம் தேதி இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் யூடியூப் சேனலில், ” ரோமானியா நாட்டிற்கான இந்திய தூதர் ராகுல் ஸ்ரீவஸ்தவா இந்தியர்களுடன் கலந்துரையாடினார் ” எனும் தலைப்பில் வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது
மேலும் படிக்க : ரஷ்யா-உக்ரைன் போரை 6 மணி நேரம் இந்தியா நிறுத்தியதாக வதந்தி!
இதற்கு முன்பாக, ரஷ்யா-உக்ரைன் போரை 6 மணி நேரத்திற்கு இந்தியா நிறுத்தி வைத்ததாக வதந்தி ஒன்று இந்திய அளவில் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.