கத்தார் உலகக் கோப்பை கால்பந்தாட்ட மைதானத்தில் தொழுகை நடத்தியதாகப் பரவும் ரஷ்யா வீடியோ

பரவிய செய்தி

FIFA உலகக் கோப்பை கால் பந்தாட்ட மைதானத்தில் தொழுகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

Facebook link 

 

மதிப்பீடு

விளக்கம்

கத்தாரில் நடக்கும் FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்ட மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி தொழுகை நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் 30 வினாடி வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

FIFA போட்டி நடைபெறும் கால்பந்தாட்ட மைதானத்தில் தொழுகை நடத்தியதாகப் பரப்பப்படும் 30 வினாடி வீடியோவில் இருந்து ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து இணையத்தில் தேடினோம். வீடியோ தொடர்பாக மூன்று முடிவுகள் கிடைக்கப்பட்டது. அதில் ஒன்று 2022, நவம்பர் 14 பதிவிடப்பட்டுள்ளது. FIFA உலகக் கோப்பை போட்டி 2022, நவம்பர் 20ம் தேதி கத்தாரில் தொடங்கியது.

சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில் KAZAN’ என்ற வார்த்தை காண முடிகிறது. எனவே, ‘Kazan prayer in stadium’ என்ற வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம். அது ரஷ்யாவில் நடந்த பழைய நிகழ்வு என்பதைக் குறிக்கும் வகையில் பல பதிவுகள் கிடைத்தது.

அவ்வீடியோ 2019, ஜூன் 3ம் தேதி ‘Quran Hadeeth And Sihah Sitta’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவிலேயே Namaz in football stadium in Kazan, Russia” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook link 

மேலும், இது குறித்துத் தேடியதில், Sisile Siddiquia என்ற யூடியூப் பக்கத்தில் ‘Prayers at Kazan stadium, Tatarstan (May 25th, 2019)’ என்ற தலைப்பில் உள்ளது. அவ்வீடியோ 2019, ஜூன் 19ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.

அந்த யூடியூப் வீடியோவின் நிலைத்தகவலில் ‘2019, மே 25ம் தேதி கசான்(Kazan), டாடர்ஸ்தானில் (Tatarstan) 15,000 பேருடன் நடைபெற்ற இப்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த தொழுகை குறித்து, ‘Metshin’ என்ற ரஷ்ய இணையதளத்தில் 2019, மே 25ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதிலும், place in Kazan’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முடிவு : 

நம் தேடலில், FIFA கால்பந்தாட்ட மைதானத்தில் தொழுகை செய்ததாகப் பரவும் வீடியோ கத்தாரில் நடைபெற்றது இல்லை. அது 2019ம் ஆண்டு, மே மாதம் ரஷ்யாவில் மைதானத்தில் நடந்த இப்தார் நிகழ்வு என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader