This article is from Apr 22, 2020

கத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா ?

பரவிய செய்தி

இவனுங்க பஹ்ரைன் ராணின்னு தூக்கிட்டு சுத்துற பீசு இது தானாம்பா. பின்ன உபி-க்கள் கொண்டாடுறாங்கன்னா சும்மாவா. இது அந்த ஊரு ஈவேரா பேத்தி.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கிஷோர் கே சுவாமி என்பவரின் முகநூல் பக்கத்தில், ” இவனுங்க பஹ்ரைன் ராணின்னு தூக்கிட்டு சுத்துற பீசு இது தானாம்பா. பின்ன உபி-க்கள் கொண்டாடுறாங்கன்னா சும்மாவா. இது அந்த ஊரு ஈவேரா பேத்தி ” என்ற வாசகத்துடன் கத்தார் நாட்டின் இளவரசி பிரிட்டன் நட்சத்திர ஓட்டல் அறையில் 7 ஆண்களுடன் இருக்கும் பொழுது கைது செய்யப்பட்டு உள்ளதாக ஆங்கில செய்தித்தாள் பக்கமும் பதிவிடப்பட்டு உள்ளது.

கத்தார் நாட்டின் இளவரசி குறித்து வெளியான செய்தியில், ” ஸ்காட்லாந்து யார்டின் உதவியுடன் பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவை குழு ஓர் ஹோட்டல் அறையில் சோதனை நடத்தியது. அதில், கத்தார் ராயல் குடும்பத்தின் இளவரசி ஷேக்கா சால்வா தங்கியிருந்தார். சோதனையைத் தொடர்ந்து இளவரசி ஏழு ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது. பாதுகாப்பு சேவை குழு அவரது ஐடி-யை சோதனை செய்த பொழுது இளவரசியின் அடையாளம் தெரிய வந்தது ” என வெளியாகி இருக்கிறது.

உண்மை என்ன ? 

கத்தார் நாட்டின் இளவரசி குறித்து இச்செய்தியை பிரிட்டிஷ் பத்திரிகையான ” Financial time “-ல் முதலில் வெளியானது என இளவரசி குறித்து செய்தி வெளியிட்ட அனைத்து இணையதளங்களும் குறிப்பிட்டு உள்ளன. ஆனால், கத்தார் இளவரசி தொடர்பாக பரவும் செய்தி உண்மையில்லை என ” The Siasat Daily ” இணையதளம் 2016-ல் செய்தி வெளியிட்டு இருந்தது.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி The Siasat Daily-ல், ” கத்தார் இளவரசி ஷேக்கா சல்வாவின் போலிச் செய்தியை ஊடகங்களின் பிரிவு வெளியிட்டது. இந்த போலிச் செய்தியை வெளியிட்ட அனைத்து ஊடகங்களும் இதற்கு பிரிட்டிஷ் செய்தித்தாள் பைனான்சியல் டைம்ஸ் காரணம் எனக் கூறின. இருப்பினும், கத்தார் இளவரசி பாலியல் விவகாரம் குறித்து பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டதாக எந்தவொரு பதிவும் இல்லை. புகைப்படத்தில் இருக்கும் பெண் ஷேக்கா சால்வா அல்ல. அவர் துபாயைச் சேர்ந்த மஸ்ருய் ஹோல்டிங்ஸின் தலைமை இயக்க அதிகாரியான ஆலியா அல் மஸ்ருய் ஆவார் ” என வெளியாகி இருக்கிறது.

கிஷோர் கே சுவாமி வெளியிட்ட செய்தித்தாள் இந்தியாவைச் சேர்ந்தது. அதில், அகமதாபாத் நகர் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், அந்த செய்தித்தாளிலும் பைனான்சியல் டைம்ஸ் செய்தியில் வெளியாகிய தகவல் என்றேக் குறிப்பிட்டு உள்ளனர்.

செய்தித்தாளில் இடம்பெற்ற பெண்ணின் புகைப்படம் குறித்து தேடுகையில், அவர் தொழிலதிபர் ஆலியா அல் மஸ்ருய் என தெரிந்து கொள்ள முடிந்தது. frivolette எனும் இணையதளத்தில் கத்தார் இளவரசி ஷேக்கா சல்வா உடைய புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

 

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, கத்தார் நாட்டின் இளவரசி ஏழு ஆண்களுடன் பாலியல் விவகாரத்தில் பிரிட்டனில் போலீசிடம் சிக்கியதாக வெளியான தகவல் போலியானது. கத்தார் இளவரசி என ஆலியா அல் மஸ்ருப் என்பவரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலிச் செய்தியை வெளியிட்டு உள்ளனர் மற்றும் பைனான்சியல் டைம்ஸ்-ல் அப்படி எந்தவொரு பதிவும் இல்லை என அறிந்து கொள்ள முடிந்தது.

Update : 

பைனான்சியல் டைம்ஸ்-ல் கத்தார் இளவரசி ஷேக்கா சல்வா குறித்த வெளியாகியதாக பிற இணையதளங்களில் இடம்பெற்ற செய்தியின் பதிவு பைனான்சியல் டைம்ஸ்-ல் இல்லை என வெளியிட்டு இருந்தோம்.

2016-ல் Firstpost இணையதளத்தில் வெளியான செய்தியில், பைனான்சியல் டைம்ஸ்-ல் கத்தார் இளவரசி தொடர்பாக வெளியிட்ட செய்தி தவறு என அறிந்த பிறகு நீக்கி விட்டதாக வெளியாகி இருக்கிறது. இதை கூடுதல் ஆதாரமாக இணைத்துள்ளோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader