ஆளையே மறைய வைக்கும் துணி: புதிய கண்டுபிடிப்பா ?

பரவிய செய்தி

கண்ணுக்கு தெரியாமல் மாயமாக மறைய வைக்கும் மேலாடை. குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த துணியை வைத்து ஒருவர் மாயமாக மறைவது ஆச்சரியமாக உள்ளது. புதிய தொழில்நுட்பத்தால் அற்புதமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

வீடியோவில் மேலாடை கொண்டு தன்னை முழுவதும் மறைத்து கொள்ளும்படி செய்தவை புதிய கண்டுபிடிப்பால் ஒன்றும் நிகழவில்லை. அதனை பற்றி தெளிவாக காண்போம்.

விளக்கம்

ஹரி பார்ட்டர் உள்ளிட்ட மாயாஜாலம் நிறைந்த திரைப்படங்களில் மேலாடையை கொண்டு ஒருவர் போர்த்திக் கொள்ளும் பொழுது அவர் இருக்கும் இடத்தில் இருந்து மறைந்து போவது போன்று காண்பிக்கப்படும். அதற்கு “invisible cloaks ” என்னும் பிறரின் கண்ணுக்கு தெரியாமல் மறைய வைக்கும் மேலாடையே காரணம் என்று கூறுவர். திரைப்படங்களில் கிராபிக்ஸ் மற்றும் VFX தொழில்நுட்பத்தில் அது போன்று மறைய வைப்பார்கள்.

Advertisement

ஆனால், உண்மையில், மறைய வைக்கும் மேலாடை ஒன்றை ஒருவர் கண்டுபிடித்து செயல்படுத்தி காட்டிய வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2017 டிசம்பரில், யார், எங்கே என்று எந்த விவரமும் குறிப்பிடாத நபர் ஒருவர் செடி, கொடிகள் நிறைந்த பகுதியில் நின்று கையில் இருந்த துணியை எடுத்து விரிக்கும் பொழுது வித்தியாசமாக தெரிகிறது. பின் முழுவதுமாக விரித்து அந்த துணியை காண்பிக்கும் பொழுது அந்த நபர் மறைந்து விடுகிறார். அவர் இருக்கும் இடத்தில் செடி, கொடிகள் மட்டுமே புலப்படுகிறது. “ Quantum invisibility cloak “  ஒன்றை கண்டுபிடித்து செயல் விளக்கம் அளித்த வீடியோ சீனாவில் மட்டுமின்றி உலகளவில் 22 மில்லியன் பார்வையாளர்களை வெறும் இரு நாட்களில் பெற்றது.

இந்த வீடியோ சீனாவின் மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் Criminal Investigation  Department-ன் துணைத் தலைவரை சென் ஷிகு-வையும் முட்டாள் ஆக்கியுள்ளது. இதை உண்மை என நினைத்து தனது weibo பக்கத்தில் பகிர்ந்து, இவை ராணுவத்திற்கு உதவும் என்றும் கூறியுள்ளார். “ குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் ஒளி ஊடுருவக் கூடிய பொருள் மூலம் உருவாக்கப்பட்ட துணி. இதை அணிந்து கொள்ளும் பொழுது ஒளி அலைகளை இவை எதிரொலிக்கும், ஆகையால் இதனால் ஒருவரை மறைய வைக்க முடிகிறது. ஆகையால், இதை ராணுவத்தில் பயன்படுத்தலாம் “ என்று கூறியுள்ளார்.

கண்ணுக்கு புலப்படாமல் மறைய வைக்கும் துணி என்பதால் அனைவரும் உண்மை என நினைத்து அதிகம் பார்க்கப்பட்டதால் வைரலாகி உள்ளது. எனினும், வீடியோவில் சில இடங்களில் சந்தேகத்தை தூண்டும் விதத்தில் சில காட்சிகள் இடம் பெற்றிருக்கும். ” 1 நிமிட நீளம் கொண்ட இந்த வீடியோவில் துணியை பிடிக்கும் பொழுது முன் பக்கத்தில் இருந்த கை விரல்கள் கூட மறைவதை காண முடிந்தது “. 

Advertisement

Quantum invisibility cloak என்று இணையத்தில் வைரலாகும் வீடியோ எடிட்டிங் மற்றும் கிரீன் மேட் மூலம் படமாக்கப்பட்டவை ஆகும். திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் கிரீன் மேட் துணியை வைத்து காட்சியையும், பின்பு யாரும் இல்லாத இடத்தில் சில கட்சிகளையும் பதிவு செய்து Adobe’s after effects போன்ற எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் செய்யப்பட்ட காட்சிகளே இவை. இதை போன்ற பல வீடியோ பதிவுகளும், அதை எவ்வாறு செய்கின்றனர் என்பது பற்றிய விளக்கமும் Youtube-ல் உள்ளன.

போட்டோஷாப் தொழில்நுட்பத்தை தாண்டி வீடியோ எடிட்டிங், வீடியோ மேக்கிங் டெக்னிக்ஸ் போன்றவை திரைப்படங்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் உபயோகிப்பது அதிகரித்து வருகிறது. ஆகையால், வீடியோ எடிட்டிங் செய்த பல வீடியோக்கள் உண்மை என நினைத்து வைரலாகியும் விடுகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button