ராகுல் காந்தியின் யாத்திரைக்கு வருபவர்களுக்கு பணம் வழங்குவதாக பாஜகவினர் பரப்பும் பழைய வீடியோ

பரவிய செய்தி

ராகுல்காந்தி யின் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும் காட்சி

மதிப்பீடு

விளக்கம்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக 58  நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

58 நொடிகள் கொண்ட வீடியோவில், வரிசையாக நிற்கும் மக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. மேலும், அவர்களில் சிலரின் கையில் காங்கிரஸ் கட்சியின் கொடி மற்றும் தலையில் தொப்பி அணிந்து இருப்பது இடம்பெற்று இருக்கிறது.

உண்மை என்ன ? 

ராகுல் காந்தியின் யாத்திரையில் எடுக்கப்பட்டதாகப் பரப்பப்படும் வீடியோ ஆனது கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ” குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியபோது ” எனக் கூறி சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டது. 

மேலும் படிக்க : சிஏஏ-க்கு எதிரான கூட்டத்திற்கு பணம் வழங்குவதாக பரவும் வீடியோ ?| உண்மை என்ன ?

கடந்த 2020ம் ஆண்டு சிஏஏ போராட்டத்துடன் தொடர்புப்படுத்தி பரப்பப்பட்ட போதே இவ்வீடியோ குறித்து நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

வீடியோவின் தொடக்கத்தில் முஸ்லீம் பெண் ஒருவரின் கையில் இருக்கும் பதாகையில் ” Ward no 5 (KMC) ” என இடம்பெற்று இருக்கும். KMC என்பதன் விரிவாக்கம் ” Kakching Municipal council ” . கக்சிங்க் நகரம் மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ளது. 2017ம் ஆண்டு மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதாக இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : இந்திய ஒற்றுமை யாத்திரையில் சர்ச், மசூதிக்கு போன ராகுல் காந்தி இந்துக் கோவிலுக்கு போகவில்லை என வதந்தி

மேலும் படிக்க : ராகுல் காந்தி விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தவில்லை எனப் பொய் பேசிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணி

இந்திய ஒற்றுமைப் பயணம் தொடங்கியது முதலே ராகுல் காந்தி குறித்து பல்வேறு பொய்கள், வதந்திகளை பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக பல கட்டுரைகளை நாம் வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண்ணுடன் ராகுல் காந்தி நடை பயணமா?

மேலும் படிக்க : முன்னாள் அமைச்சர் ராகுல் காந்திக்கு “ஷூ லேஸ்” கட்டி விட்டதாக பொய் செய்தி வெளியிட்ட நியூஸ் 18 தமிழ் !

முடிவு : 

நம் தேடலில், ராகுல்காந்தியின் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும் காட்சி எனப் பரப்பப்படும் தகவல் வதந்தியே. இந்த வீடியோ கடந்த 2017ம் ஆண்டு மணிப்பூரில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Back to top button
loader