ராகுல் காந்தி கோதுமை அளவை லிட்டரில் கூறியதாக பரவும் வீடியோ.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

ஆட்டா லிட்டர் என்ன விலை என்கிறார். ஏன் கிலோ என்று சொல்லாமல் லிட்டர் என்கிறார்.

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், ” முன்பு கோதுமை மாவு(ஆட்டா) ஒரு லிட்டர் ரூ.22, இப்போது லிட்டருக்கு ரூ.40  “எனக் குறிப்பிட்டு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

கோதுமை அளவை கிலோ கணக்கில் கூறுவதற்கு பதிலாக லிட்டர் கணக்கில் குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசியதாக இவ்வீடியோ நாடு முழுவதிலும் பாஜகவினரால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

ராகுல் காந்தி பேசியதாக வைரல் செய்யப்படும் வீடியோ செப்டம்பர் 4ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது எடுக்கப்பட்டது. இதன் முழுமையான வீடியோ இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சின் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.

மேற்காணும் வீடியோவில், 2014ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அத்தியாவசியப் பொருட்களின் விலையையும், தற்போது உள்ள விலையையும் ஒப்பிட்டு பேசிக் கொண்டிருப்பார்.

அப்போது 1.52.00 மணி நேரத்தில் ராகுல் காந்தி பேசும் போது, ” 2014ல் சிலிண்டர் விலை ரூ.410, இன்று ரூ.1050. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.70, இன்று ஒரு லிட்டர் ரூ.100. டீசல் லிட்டருக்கு ரூ.55, இன்று ஒரு லிட்டர் ரூ.90. கடுகு எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.90, இன்று லிட்டருக்கு ரூ.200. பால் லிட்டருக்கு ரூ.35, இன்று லிட்டருக்கு ரூ.60. கோதுமை(ஆட்டா) லிட்டருக்கு ரூ.22, இன்று லிட்டருக்கு ரூ.40 எனப் பேசி இருப்பார்.

ராகுல் காந்தி விலைப் பற்றி பேசிய போது தொடர்ந்து லிட்டர் சார்ந்த பொருட்களைப் பற்றி பேசிய பிறகு கோதுமையையும் லிட்டர் எனக் குறிப்பிட்டு உள்ளார். ஆனால், கோதுமை அளவை லிட்டர் என தவறாகக் கூறியதை தொடர்ந்து கிலோ கிராம் என திருத்திக் கூறி இருக்கிறார். ஆனால், ராகுல் காந்தி கோதுமை அளவை லிட்டரில் கூறியதுடன் வீடியோவை கட் செய்து சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், ராகுல் காந்தி கோதுமை அளவை லிட்டரில் கூறியதாக பரப்பப்படும் வீடியோ டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேசிய போது எடுக்கப்பட்து. கடந்த 2014ம் ஆண்டில் இருந்த அத்தியாவசியப் பொருட்களின் விலையை தற்போதைய விலையுடன் ஒப்பிட்டு பேசும் போது கோதுமையையும் தவறுதலாக லிட்டரில் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

ஆனால், உடனடியாக அதை திருத்தி கிலோ கிராம் என ராகுல் காந்தி பேசி இருக்கிறார். ஆனால், அவர் கிலோ கிராம் எனப் பேசியதை கட் செய்து விட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader