இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தி சாமியார் வேடமிட்டதாகப் பரப்பப்படும் எடிட் புகைப்படம் !

பரவிய செய்தி

மக்களை ஏமாற்றிட இன்னும் எத்தனை வேடம்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தி இந்து சாமியார் வேடமணிந்து நடைபயணம் மேற்கொண்டு வருவதாக பாஜக ஆதரவாளர்கள் பலர் இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.

Archive link 

உண்மை என்ன ? 

ராகுல் காந்தி சாமியார் வேடத்தில் இருப்பதாக பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருப்பது தெளிவாய் தெரிகிறது. அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த போது, ” டிசம்பர் 3ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணத்தில் கம்யூட்டர் பாபா கலந்து கொண்டதாக புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தின் மஹுதியா பகுதியில் கம்யூட்டர் பாபா ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்ட வீடியோ பதிவு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் டிசம்பர் 3ம் தேதி வெளியாகி இருக்கிறது.

டிசம்பர் 3ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் அப்புகைப்படம் பதிவாகி உள்ளது.

Twitter link | Archive link 

மத்தியப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கம்யூட்டர் பாபாவின் உடலுடன் ராகுல் காந்தியின் தலையை ஒட்டியும், அதேபோல் காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் தலையினை ராகுல் காந்தியுடன் எடிட் செய்தும் மாற்றி உள்ளனர்.

மேலும் படிக்க : இந்திய ஒற்றுமை யாத்திரையில் சர்ச், மசூதிக்கு போன ராகுல் காந்தி இந்துக் கோவிலுக்கு போகவில்லை என வதந்தி

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது ராகுல் காந்தி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கோவில்களுக்கு செல்லாமல், சர்ச், மசூதிகளுக்கு மட்டும் சென்றதாகவும், அதுவே வடமாநிலங்களில் நுழைந்த உடன் கோவில் கோவிலாக செல்வதாகவும் தவறான தகவல் தொடர்ந்து பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தி சாமியார் வேடமணிந்து செல்வதாக பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Watch: Computer Baba Joins Rahul Gandhi’s Bharat Jodo Yatra

Bharat Jodo Yatra: Namdev Das Tyagi or Computer Baba, Joins Rahul Gandhi In Madhya Pradesh

Back to top button
loader