ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் கேரவன் என பாஜகவினர் பரப்பும் தவறான படங்கள் !

பரவிய செய்தி

இன்பச் சுற்றுலா மாதிரி இருக்கு பப்பு யாத்திரை…

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி முன்னெடுத்து நடத்தி வருகிறார். ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பாஜக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

யாத்திரையில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி மற்றும் அவரது கட்சி தலைவர்கள் தங்குவதற்கு 60 கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக செய்திகளில் வெளியாகின. இப்படி யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் கேரவன்களில் உள்ள வசதி எனக் கூறி தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதை பாஜகவினரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

உண்மை என்ன ? 

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பதிவிட்ட புகைப்படங்களை பார்கையில், அது பழைய படங்கள் போன்றும், அங்கு காட்டப்பட்டு உள்ள ட்ரேக்களுக்கு பொருந்தாமலும் இருந்தன.

இதையடுத்து அப்புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2013ம் ஆண்டு ” JCBL PLA HS75 ” மற்றும் பஞ்சாப்பை மையமாகக் கொண்ட நிறுவனம் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்த Fiat Ducato chassis வாகனத்தை கேரவன் ஆக மாற்றி உள்ளதாக இப்புகைப்படங்கள் கீழ்காணும் இணையதளத்தில் வெளியாகி இருக்கின்றன.

பாஜகவின் நிர்மல் குமார் ட்விட்டரில் ராகுல் காந்தியின் கேரவன் எனப் பதிவிட்ட இரண்டு புகைப்படங்களும் கடந்த 2013ம் ஆண்டு சில இணையதளங்களில் வெளியான கேரவன்களின் பழைய படங்கள் என அறிய முடிகிறது.

எனினும், ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பயன்படுத்த ஏசி உடன் கூடி படுக்கை அறை, கழிப்பறை என தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள கேரவனில் எடுக்கப்பட்ட வீடியோவை பாஜகவினர் வைரல் செய்து வருகின்றனர்.

முடிவு : 

நம் தேடலில், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல் காந்தி மற்றும் அக்கட்சி தலைவர்கள் பயன்படுத்தப்படும் கேரவன் என தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பதிவிட்ட புகைப்படங்கள் தவறானவை. அவை 2013ல் சில இணையதளங்களில் வெளியான பழைய புகைப்படங்கள்.

எனினும், காங்கிரஸ் கட்சியின் யாத்திரையில் பங்கேற்கும் தலைவர்கள் பயன்படுத்த தேவையான வசதிகளுடன் கூடிய கேரவனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படு வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader