ராகுல் காந்தி கையில் உள்ள பேட்சில் 420 என இருப்பதாகச் சரவண பிரசாத் பரப்பிய எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

பரவிய செய்தி
ராகுல் காந்தியின் கையில் கட்டிய பேட்சில் (Badge) 420 என்று உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடந்த 21ம் தேதி (செப்) டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களைச் சந்தித்தார்.
இந்நிலையில், அவர் தொழிலாளர்களைச் சந்தித்த போது கையில் கட்டிய பேட்சில் (Badge) 420 என இருப்பதாகப் புகைப்படம் ஒன்றினை வலதுசாரி ஆதரவாளர் சரவண பிரசாத் பாலசுப்ரமணியன் உள்பட பலரும் இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.
எல்லா பொருத்தமும் பிரமாதம். 😂
அடேய்களா, உங்களுக்கு வேற நெம்பரே கிடைக்கலையாடா.. ?! pic.twitter.com/oe29R56wzv
— சாணக்கியன் 2.0 🇮🇳🚩 (@Chanakiyan_v2) September 25, 2023
😂😂😂😂😂 pic.twitter.com/3cTJkMwQzE
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) September 25, 2023
உண்மை என்ன ?
சரவண பிரசாத் பதிவிட்டிருந்த ராகுல் காந்தியின் படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில் அது போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் கடந்த 21ம் தேதி (செப்) ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்களைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காண முடிந்தது. அதில் பரவக் கூடிய படமும் உள்ளது.
कुली भाइयों के बीच जननायक pic.twitter.com/nor4tSyoR8
— Congress (@INCIndia) September 21, 2023
அப்படத்தின் ராகுல் காந்தியின் கையில் உள்ள பேட்சில் ‘756’ என்று உள்ளதைக் காண முடிகிறது. மேலும் அன்றைய தினத்தில் எடுக்கப்பட்ட வேறு படங்களில் ராகுல் காந்தி கையில் கட்டப்பட்டுள்ள பேட்சில் என்ன எண் உள்ளது என ஆராய முற்பட்டோம்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜீனத் ஷப்ரின் என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்களில் சீருடையில் இருக்கும் வேறொரு படத்தினை பதிவிட்டுள்ளார். அதிலும் அந்த பேட்சில் ‘756’ என்ற எண் தான் உள்ளது.
View this post on Instagram
ஆந்திரா இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இதே படம் பதிவிடப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து ராகுல் காந்தி கையில் கட்டப்பட்டுள்ள பேட்சில் உள்ள எண் 420 என போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க : பிரதமர் மோடிக்கு மேல் நேரம் 4:20 எனக் காண்பித்ததாக எடிட் செய்த படத்தைப் பதிவிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ !
இதற்கு முன்னர் பிரதமர் மோடியின் புகைப்படம் ஒன்றில் உள்ள டிஜிட்டல் கடிகாரத்தில் 4.20 என நேரம் இருப்பதாகப் போலியாக எடிட் செய்து பரப்பப்பட்ட புகைப்படம் குறித்த உண்மைத் தன்மையினை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் கையில் கட்டப்பட்டுள்ள சுமை தூக்கும் தொழிலாளர் பேட்சில் 420 என்ற எண் இருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது. அந்த பேட்சில் ‘756’ என்ற எண் தான் உள்ளது என்பதை அறிய முடிகிறது.