ராகுல்காந்தியை சிறுமி திணறடித்ததாக புரளி ! வெளியிட்ட பிரபல பத்திரிகை.

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
14 வயது குழந்தை ராகுல் காந்தியை கேள்வியால் திணறடித்தார் என ஒரு புரளியை பரப்ப அதை தினமலரும் வெளியிட்டுள்ளது. வழக்கம் போல நம்ம ஆடிட்டர் குருமூர்த்தி (தற்போது RBI இல் கூடுதல் இயக்குநர் வேறு!) அதை டுவிட் செய்துவிட்டார்.
பின் சத்தமில்லாமல் delete செய்து விட்டார். இது வழக்கமானது தான். சரி நடந்தது என்ன? துபாய் நிகழ்வில் ராகுல்காந்தியை கேள்வி கேட்டு திணறடித்த சிறுமி என்று செய்தியை பிரபல புரளிதளமான Post card வெளியிட்டது.
உண்மையில் அது பள்ளி நிகழ்வில் அந்த குழந்தை பேசியது. 2016-ல் youtube-ல் வெளியாகி இருக்கிறது. ராகுல் காந்தியை துபாய் நிகழ்வில் இந்த குழந்தை ஏற்கனவே ஒன்றும் செய்யவில்லை , இனி என்ன செய்யப் போகின்றீர்கள்.மோடி ஆட்சியில் பின்னுகிறார் என்ற ரீதியில் கேட்டதாக பரப்பப்பட்டது.
துபாய் நிகழ்வில் பெரும் பகுதி Live முழுமையாக செய்யப்பட்டுள்ளது. அங்கு கலந்து கொண்டவர்களுக்கும் மறுத்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஒரு பொய்யை மெகா மார்கெட் செய்யும் வியாபாரம் பஞ்சர் ஆகியது.. தேர்தல் காலம் இனி பல கதை வரும் . தொடர்ந்து YouTurn உடன் இணையுங்கள்..