ராகுல் காந்தி மாஸ்க் அணிந்து கொண்டு சாப்பிடுவதாகத் தவறாகப் பரப்பப்படும் புகைப்படம் !

பரவிய செய்தி
ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் மாஸ்க் அணிந்து கொண்டும் சாப்பிடலாம்…
மதிப்பீடு
விளக்கம்
மக்களுடன் பந்தியில் அமர்ந்து இருக்கும் ராகுல் காந்தி மாஸ்க் அணிந்து கொண்டு சாப்பிடுவதாகவும், மக்களுடன் உணவு அருந்துவது போல் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டதாகவும் இப்புகைப்படம் பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உலகத்திலேயை மாஸ்க் போட்டு சாப்பிட்ட., ஒரே ஆளு நம்மாளு தான்…!! pic.twitter.com/vDKXd1hM8w
— கைப்புள்ள (@kaippulla123) April 8, 2023
ராகுல் காந்தி மாஸ்க் உடன் பந்தியில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் கடந்த 2021 ம் ஆண்டில் இருந்தே சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2021 ஜனவரி 24ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” அன்பும் பண்பும் நிறைந்த தமிழ் மக்களோடு உணவு உண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. – தலைவர் ராகுல் காந்தி ” எனக் கூறி ராகுல் காந்தி உணவு அருந்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டு உள்ளன.
அன்பும் பண்பும் நிறைந்த தமிழ் மக்களோடு உணவு உண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
– தலைவர் ராகுல் காந்தி#ThalaivarRahulGandhi#VaangaOruKaiPaapom pic.twitter.com/hhc1VNvK1E
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) January 24, 2021
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பதிவில் ராகுல் காந்தி மாஸ்க் அணிந்து இருக்கும் புகைப்படத்துடன் அவர் உணவு அருந்தும் படங்களும் இடம்பெற்று இருக்கின்றன.
மேற்கொண்டு தேடுகையில், 2021 ஜனவரி மாதம் ராகுல் காந்தி ஈரோடு பகுதியில் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நடத்திய பிறகு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு அருந்தி உள்ளார். அதுகுறித்து வெளியான செய்தியில், ராகுல் காந்தி மாஸ்க்கை கழட்டி வைத்து விட்டு உணவு அருந்தும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.
உணவு அருந்துவதற்கு முன்பாக ராகுல் காந்தி மாஸ்க் உடன் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.
மேலும் படிக்க : சாவர்க்கர் பேரன் வழக்குப் போடுவேன் என்றதும் சாவர்க்கர் பற்றிய ட்வீட்களை ராகுல் காந்தி நீக்கியதாகப் பரவும் பொய் !
மேலும் படிக்க : ராகுல் காந்தியின் பேச்சில் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை வைத்து பல பொய்களைப் பரப்பும் Poli Talk’s
இதற்கு முன்பாக, ராகுல் காந்தி குறித்து திட்டமிட்டு பரப்பப்பட்ட எண்ணற்ற பொய் செய்திகள் மற்றும் வதந்திகள் குறித்த கட்டுரைகளையும் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், ராகுல் காந்தி மாஸ்க் அணிந்து கொண்டே உணவு உண்பதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த புகைப்படம் 2021ல் ஈரோட்டில் நெசவாளர்கள் உடன் மதிய உணவு அருந்துவதற்கு முன்பாக எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.