ராகுல் காந்தி தங்கை பிரியங்காவிற்கு முத்தமிட்ட படத்தை மார்பிங் செய்து பரப்பும் வலதுசாரிகள் !

பரவிய செய்தி
யாரைப் பார்த்தாலும் பச்சக்னு முத்தம் குடுத்துக்கிட்டு.. இது ஏதோ மனோ வியாதின்னு நினைக்கிறேன்.
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்று வந்த பாரத் ஜோடோ யாத்திரை முடிவுக்கு வந்த நிலையில், அவர் நாடாளுமன்றத்தில் அதானி-ஹிண்டன்பர்க் குறித்த விவாதத்தை முன்னெடுத்தது நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தி யாரை பார்த்தாலும் முத்தம் கொடுத்து வருவதாக, அவர் மேடையில் ஒருவருக்கு முத்தமிடும் புகைப்படத்தை வலதுசாரிகள் பரப்பி வருகின்றனர்.
நம்ம ஒன்னும் சொல்ல வேண்டாம் பின்னால உதவியாளர் முகத்தை பாருங்க போதும் pic.twitter.com/vFoUfwsEia
— Common Citizen 🇮🇳 (@LawAcademics) February 7, 2023
இதெல்லாம் ஒரு வருங்கால பிரதமர் கேன்டிடேட்…
தலையெழுத்து…🤦🤦 pic.twitter.com/qzh6Ii1XQO
— பாரதி கண்ணம்மா,🚩जय श्री राम🚩🚩🚩🚩 (@vanamadevi) February 8, 2023
உண்மை என்ன ?
பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த ஜனவரி மாதம் பாரத் ஜோடா யாத்திரையின் போது ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்திக்கு முத்தமிட்ட படமே கிடைத்தது. ஏற்கனவே இப்புகைப்படம் அண்ணன்-தங்கையின் பாசம் என்ற வாசங்களுடன் நாடு முழுவதிலும் வைரலான ஒன்று.
भाई बहन का निश्छल प्रेम#BharatJodoYatra pic.twitter.com/qBFxzRY4JE
— Bharat Jodo (@bharatjodo) January 3, 2023
ராகுல் காந்தி தனது தங்கைக்கு முத்தமிட்ட நிகழ்வின் வீடியோவானது ஜனவரி 3ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
❤️❤️ pic.twitter.com/9MIQKMIdAQ
— Congress (@INCIndia) January 3, 2023
பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்திக்கு முத்தமிட்ட படத்தில் வேறொருவரின் முகத்தை மார்பிங் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : ராகுல் காந்தி மது அருந்துவது போல் தவறாக பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !
மேலும் படிக்க : நேபாள இரவு விருந்து வீடியோவில் ராகுல் காந்தியுடன் இருக்கும் பெண் சீனத் தூதர் எனப் பரவும் வதந்தி !
மேலும் படிக்க : முன்னாள் அமைச்சர் ராகுல் காந்திக்கு “ஷூ லேஸ்” கட்டி விட்டதாக பொய் செய்தி வெளியிட்ட நியூஸ் 18 தமிழ் !
இதற்கு முன்பாக, ராகுல் காந்தியின் நடத்தை குறித்தும், பாரத் ஜோடோ யாத்திரை குறித்தும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு இருக்கின்றன. அவை குறித்தும் நாம் கட்டுரை பதிவிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், ராகுல் காந்தி யாரைப் பார்த்தாலும் முத்தம் கொடுப்பதாக பரப்பப்படும் படமானது அவர் தனது தங்கை பிரியங்கா காந்திக்கு முத்தம் கொடுத்த போது எடுக்கப்பட்ட படம். அதை மார்பிங் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.