ராகுல் காந்தி விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தவில்லை எனப் பொய் பேசிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணி

பரவிய செய்தி

இன்று காங்கிரஸ் கட்சியிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். கன்னியாகுமரியில் இருந்து இந்தியா ஒற்றுமைக்காக யாத்திரை செல்கிறீர்களே, அதில் சுவாமி விவேகானந்தருக்கு மரியாதை செலுத்துவதை புறக்கணிக்கும் கேவலமான வேலையை செய்யாதீர்கள். ஆனால் அதுபோன்ற நல்ல செயலை(விவேகானந்தருக்கு மரியாதை செலுத்துவது) ராகுல் காந்தியால் ஏற்றுக்கொள்ள முடியாது- பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணி

மதிப்பீடு

விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது, கன்னியாகுமரியில் விவேகானந்தருக்கு மரியாதை அளிக்காமல் காங்கிரஸ் புறக்கணித்ததாக பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணி மேடையில் பேசியது இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

மேற்காணும் வீடியோவில் 1௦.25 வது நிமிடத்தில், ” இன்று காங்கிரஸ் கட்சியிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். கன்னியாகுமரியில் இருந்து இந்தியா ஒற்றுமைக்காக யாத்திரை செல்கிறீர்களே, அதில் சுவாமி விவேகானந்தருக்கு மரியாதை செலுத்துவதை புறக்கணிக்கும் கேவலமான வேலையை செய்யாதீர்கள். ஆனால் அதுபோன்ற நல்ல செயலை(விவேகானந்தருக்கு மரியாதை செலுத்துவது) ராகுல் காந்தியால் ஏற்றுக்கொள்ள முடியாது ” என இந்தியில் பேசி இருக்கிறார்.

உண்மை என்ன ? 

செப்டம்பர் 7ம் தேதி ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமை பயணத்தை தொடங்கும் போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்திய வீடியோவை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

Twitter link | Archive link 

மேலும், ராகுல் காந்தி கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட போது பதிவான காட்சிகள் தமிழ் செய்தி தளங்களிலும் செப்டம்பர் 7ம் தேதியே வெளியாகி இருக்கின்றன.

 

ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமை பயணத்தை தொடங்கியதில் இருந்தே பாஜக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொய்யான கருத்துகள் மற்றும் படங்களும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க : அரை டவுசருடன் நேரு : இது ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அல்ல

மேலும் படிக்க : ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் கேரவன் என பாஜகவினர் பரப்பும் தவறான படங்கள் !

முடிவு : 

நம் தேடலில், ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை பயணத்தில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தரின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தவில்லை என பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசிய தகவல் பொய்யே. இந்தியா ஒற்றுமை பயணத்தின் தொடக்கத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு ராகுல் காந்தி சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader