ராகுல் காந்தி வெளிநாடுகளில் ‘ராகுல் ராஜீவ் பெஃரோஸ்’ என்ற பெயரைப் பயன்படுத்துவதாகப் பாஜகவினர் பரப்பும் எடிட் படம் !

பரவிய செய்தி
நம்ம வூர்லதான் காந்தி வேசம்! வெளி நாடு வந்தா ராகுல் ராஜிவ் பெஃரோஸ்னு ஒரிஜினல் பேர்தான் வச்சிப்பாரு நம்ம பப்பு இவர்களின் வரலாறு இதுவே.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி இந்தியாவில் இருக்கும் போது மட்டும் காந்தி பெயரைப் பயன்படுத்துவதாகவும், வெளிநாட்டிற்கு சென்றால் ராகுல் ராஜீவ் பெஃரோஸ் என்ற பெயரைப் பயன்படுத்துவதாக இப்புகைப்படத்தை தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.
நம்ம வூர்லதான் காந்தி வேசம்!
வெளி நாடு வந்தா ராகுல் ராஜிவ் பெஃரோஸ்னு ஒரிஜினல் பேர்தான் வச்சிப்பாரு நம்ம பப்பு இவர்களின் வரலாறு இதுவே…#Annamalai #அண்ணாமலை_எனும்_ஆளுமை @annamalai_k @Arun_tnbjp @gunalan_hockey @GSenthi87359082 pic.twitter.com/DTHCyFGifQ— Dhilip kumar (@dhilipkumarg4) March 8, 2023
நம்ம வூர்லதான் காந்தி வேசம்!
வெளி நாடு வந்தா ராகுல் ராஜிவ் பெஃரோஸ்னு ஒரிஜினல் பேர்தான் வச்சிப்பாரு நம்ம தலைவரு…,😀🤣😅🤣 நல்ல நடிகர் pic.twitter.com/4Gya188I8g— Manimaran (@kmani2011) March 7, 2023
உண்மை என்ன ?
மார்ச் 3ம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் “Learning To Listen In 21st Century ” எனும் தலைப்பில் தன்னுடைய விரிவுரையை ஆற்றினார். அவரின் பேச்சை விமர்சித்து டைம்ஸ் நவ் வெளியிட்ட வீடியோவில் 4.12வது நிமிடத்தில் வைரல் செய்யப்படும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
ஆனால், ராகுல் காந்தி முன்பாக உள்ள அட்டையில் பெயர் ஏதும் இல்லாமல் வெள்ளையாக மட்டுமே இருப்பதை பார்க்க முடிந்தது.
மேற்கொண்டு வைரல் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மார்ச் 1ம் தேதி சாம் பிட்ரோடா எனும் ட்விட்டர் பக்கத்தில், “கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய விரிவுரையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ” எனக் கூறி பதிவிடப்பட்டு உள்ளது. இப்பதிவில் ராகுல் காந்தியின் உண்மையான புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
Some pictures from @RahulGandhi’s great lecture at @CambridgeMBA during his visit to a fellow of @CambridgeJBS Cambridge University on “Learning to Listen in the 21st Century.”#BharatJodoYatra#RahulGandhiinCambridge pic.twitter.com/1kaZ6tVvjy
— Sam Pitroda (@sampitroda) March 1, 2023
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய விரிவுரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவருக்கு முன்பாக பெயர் பலகை இல்லை, அங்கிருந்த வெள்ளை அட்டையில் ராகுல் ராஜீவ் பெஃரோஸ் என போலியாக எடிட் செய்து பரப்பி உள்ளனர்.
மேலும் படிக்க : மோடி ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பாக பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாகப் பரவும் வதந்தி !
மேலும் படிக்க : ராகுல் காந்தி மது அருந்துவது போல் தவறாக பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !
இதற்கு முன்பாக ராகுல் காந்தி குறித்து பரப்பப்பட்ட பல்வேறு வதந்தி பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், ராகுல் காந்தி வெளிநாடுகளில் தன் பெயரை ராகுல் ராஜீவ் பெஃரோஸ் எனப் பயன்படுத்தி வருவதாகப் பரப்பப்படும் புகைப்படம் போலியாக எடிட் செய்யபட்டது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.