இரயில்வே நிர்வாகத்தைத் தனியாருக்கு அளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி
இனி வரும் காலங்களில் இது போன்ற ரயில் விபத்துகளை தடுப்பதற்கு இரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது தான் சிறந்த முடிவாகும் – வானதி சீனிவாசன். Facebook link
மதிப்பீடு
விளக்கம்
ஒடிசா மாநிலம் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் இரயில் நிலையம் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இதுபோன்ற விபத்து இனி நடைபெறாமல் இருக்க இரயில்வே நிர்வாகத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பது தான் சிறந்த முடிவாக இருக்கும் என பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளதாக செய்தி ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
தனியாரிடம் ஒப்படைப்பதா? காங்கிரஸிடம் ஒப்படைப்பதா? என்பதை விரைவில் மக்கள் முடிவு செய்வார்கள்
தனலாபம் எதற்கு
எழுதினாள் என்பது புரிகிறது pic.twitter.com/HJOORQmGN3— Shan Sundar 🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) June 4, 2023
உண்மை என்ன ?
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவும் தகவல் வேறு ஏதேனும் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளதா எனத் தேடினோம். இரயில்வே நிர்வாகத்தைத் தனியாருக்கு அளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இனி வரும் காலங்களில் இது போன்ற ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது தான் சிறந்த முடிவாகும் – வானதி சீனிவாசன். #VanathiSrinivasan pic.twitter.com/b8MkSa3Hwy
— News Now 4 தமிழ் (@NewsNow4tamil) June 3, 2023
பரவக் கூடிய ஸ்கிரீன்ஷார்டில் ‘News Now 4 தமிழ்’ என்றுள்ளது. அப்பெயரைக் கொண்டு தேடியதில், அது ஒரு அங்கீகரிக்கப்படாத ஊடகம் என்பதை அறிய முடிகிறது. அப்பெயரில் உள்ள இணையதளத்தில் கடைசியாகப் பிப்ரவரி மாதம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு எந்த பதிவும் அவர்களது இணையதளத்தில் இல்லை.
மேற்கொண்டு இதுகுறித்து தேடியதில், வானதி சீனிவாசன் டிவிட்டர் பக்கத்தில் கடந்த 3ம் தேதி ஒடிசா ரயில் விபத்து தொடர்பாகப் பதிவிட்டுள்ளதைக் காண முடிந்தது. அதில், “ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்த துயரம் கேட்டு மிகுந்த மனவருத்தமடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்த துயரம் கேட்டு மிகுந்த மனவருத்தமடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
விபத்து…
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 3, 2023
மேலும், பரவக் கூடிய ஸ்க்ரீன்ஷாட்டினை பதிவிட்டு, அது போலியான செய்தி என வானதி சீனிவாசனும் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவற்றிலிருந்து இச்செய்தியை எந்த ஆதாரமும் இல்லாமல் ‘நியூஸ் நவ் 4 தமிழ்’ என்ற சமூக வலைத்தள பக்கம் பதிவிட்டுள்ளதை அறிய முடிகிறது.
Fake news… pic.twitter.com/Cz0gA2WIi7
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 5, 2023
மேலும் படிக்க : 2000 ரூபாய் நோட்டில் நிறைய குறைபாடுகள் இருப்பதால்தான் செல்லாது என அறிவித்ததாக வானதி சீனிவாசன் கூறினாரா ?
இதற்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டில் நிறையக் குறைபாடுகள் இருப்பதினால்தான் செல்லாது என அறிவிக்கப்பட்டதாக வானதி சீனிவாசன் கூறினார் என ஒரு தவறான செய்தி பரவியது. அதன் உண்மைத் தன்மை குறித்தும் யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், இரயில் விபத்துக்கள் நடக்காமல் இருக்க இரயில்வே நிர்வாகத்தைத் தனியாருக்கு அளிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவும் தகவல் பொய்யான செய்தி என்பதை அறிய முடிகிறது.