ராஜஸ்தானில் கொல்லப்பட்டவர் என யாரோ ஒருவர் படத்தை பரப்பும் அர்ஜுன் சம்பத் !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் இஸ்லாமிய அடிப்படைவாதி இருவரால் டெய்லர் கண்ணையா லால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர கொலையை கண்டித்து நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதற்கிடையில், டெய்லர் கண்ணையா பற்றிய பதிவுகளில் தையல் இயந்திரத்துடன் வயதான நபர் அமர்ந்து இருக்கும் ஒருவரின் படமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தின் பதிவிலும் இப்படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

உண்மை என்ன ? 

ராஜஸ்தானில் டெய்லர் கண்ணையா கொலை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான படமும், வைரல் செய்யப்படும் இப்படமும்(Illustration) வெவ்வேறாக உள்ளது.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் தையல் இயந்திரத்துடன் இருக்கும் நபரின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், புகைப்பட விற்பனை தளமான shutterstock இணையதளத்தில் 2015-ம் ஆண்டு ஜோத்பூரில் எடுக்கப்பட்டதாக உண்மையான புகைப்படம் பதிவாகி இருக்கிறது.

2015-ல் ஜோத்பூரில் எடுக்கப்பட்ட வயதான டெய்லரின் படத்தை மாற்றி (Illutration) உதய்பூர் கண்ணையா மரணம் பற்றிய பதிவுகளில் தவறாக பகிர்ந்து வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், ராஜஸ்தானில் கொலை செய்யப்பட்ட டெய்லர் கண்ணையா லால் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தையல் இயந்திரத்துடன் இருக்கும் நபரின் படத்தில் இருப்பது கண்ணையா அல்ல, அது 2015-ல் shutterstock-ல் வெளியான படம் என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button