ஜேஎன்யூ பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ரஜினி பேட்டியளிப்பதாக வதந்தி!

பரவிய செய்தி
நடிகர் ரஜினிகாந்த் ஜேஎன்யூ பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது முகமூடி அணிந்த குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதிலும் கண்டனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் மீதான தாக்குதல்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறுவாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில், “நடிகர் ரஜினிகாந்த் ஜேஎன்யூ பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ” என புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், ரஜினி பேட்டி அளிப்பதாக கூறி வெளியாகும் செய்தி தவறானவை. அவ்வாறு பகிரப்படும் நியூஸ் கார்டு புதிய தலைமுறை செய்தியில் வெளியானவை அல்ல. புதிய தலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்தில் ரஜினி குறித்த மேற்காணும் நியூஸ் கார்டு வெளியாகவில்லை. மேலும், இது குறித்து புதிய தலைமுறை தரப்பிலும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதிய தலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு நியூஸ் கார்டில் ரஜினி குறித்த செய்தியை போட்டோஷாப் செய்துள்ளார்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.