குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவிற்கு நடிகர் ரஜினி ஆதரவா ?

பரவிய செய்தி
CAB-க்கு ரஜினி ஆதரவு !
நாட்டின் பாதுகாப்பிற்காக சில கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் – ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களிடையே ரஜினி பேச்சு.
மதிப்பீடு
விளக்கம்
டிசம்பர் 12-ம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய ரஜினிகாந்த், இந்தியக் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததாக புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தது உண்மையா என்பதை அறிந்து கொள்ள செய்திகளை ஆராய்ந்த பொழுது, அது தொடர்பான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
அடுத்ததாக, பரவி வரும் நியூஸ் கார்டு புதிய தலைமுறை செய்தி ஊடகத்தின் பெயரில் இருப்பதால், முகநூலில் புதிய தலைமுறையின் பக்கத்தில் தேடிப் பார்த்தோம். அங்கும் 12-ம் தேதி வெளியான செய்திகளில் ரஜினி குறித்த நியூஸ் கார்டு இல்லை.
மாறாக, 11-ம் தேதி ரஜினியின் புகைப்படத்துடன் வெளியான மற்றொரு செய்தி நமக்கு கிடைத்தது. அந்த நியூஸ் கார்டில்தான் நடிகர் ரஜினி CAB-க்கு ஆதரவு தெரிவித்ததாக போலியான செய்தியை உருவாக்கி உள்ளனர்.
இது தொடர்பாக, புதிய தலைமுறை செய்தி நிறுவனம் ” நடிகர் ரஜினி CAB-க்கு ஆதரவு தெரிவித்ததாக ” பரவும் நியூஸ் கார்டு போலியானவை என தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 12, 2019
மேலும் படிக்க : இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம் என ஜேபி நட்டா கூறினாரா ?
செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகள் மற்றும் ட்விட்டர் பதிவுகளின் வடிவில் போலியான செய்திகளை சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பி வருகின்றனர் என்பதை தொடர்ந்து நாம் பதிவிட்டு வருகிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.