இன்பநிதியை “சின்ன சின்னவர்” எனக் கூறி ராஜீவ் காந்தி பதிவிட்டதாக பரப்பப்படும் போலி ட்வீட் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஜூன் 30-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அந்த படத்தை ” எங்கள் சின்ன சின்னவர் ” எனக் கூறி திமுகவின் மாநில செய்தித் தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ட்விட்டரில் பகிர்ந்து உள்ளதாக ஸ்க்ரீன்சார்ட் ஒன்றை சவுக்கு சங்கர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அந்த ஸ்க்ரீன்சார்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
திமுக ராஜீவ் காந்தி இந்த மாதிரி பதிவு போட்டது உண்மையா
என்ன பிளாக் பண்ணி இருக்காப்ல அதனால பாத்தவங்க சொல்லுங்க pic.twitter.com/0IvKqrOrMa
— JSK.Gopi (Jayam.SK.Gopi) (@JSKGopi) June 30, 2022
உண்மை என்ன ?
வைரலாகும் ட்வீட் பதிவு குறித்து திமுகவின் ராஜீவ் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், அப்படியான பதிவு ஏதும் இடம்பெறவில்லை. இதையடுத்து, ராஜீவ் காந்தி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” இதை நான் பதிவிடவில்லை, போலியானது ” எனப் பதில் அளித்து உள்ளார்.
எங்கள் சின்ன சின்னவர் https://t.co/4FGVV7IYeV
— R.Rajiv Gandhi (@rajiiv_dmk) June 30, 2022
ட்வீட் பதிவில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு ட்விட்டரில் தேடிய போது, அது ராஜீவ் காந்தி பெயரில் இயங்கும் போலி ட்விட்டர் கணக்கில் பதிவாகி இருப்பதை காண முடிந்தது. @rajiv_dmk என்ற ஐடி-யில் இயங்கும் ட்விட்டர் பக்கமே ராஜீவ் காந்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம். அதே பெயரில் rajiiv_dmk என போலியான ட்விட்டர் ஐடியை உருவாக்கி இதுபோன்ற போலியான ட்வீட்கள் பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை சின்ன சின்னவர் எனக் குறிப்பிட்டு திமுகவின் ராஜீவ் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாக பரப்பப்படும் பதிவு போலியானது. ராஜீவ் காந்தி பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியான ட்வீட் பதிவை தவறாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.