இராமாயணத்தில் வரும் ஜடாயு பறவை கேரளாவில் காணப்பட்டதா ?

பரவிய செய்தி

கேரள மாநிலத்தின் சடயமங்கலம் வனப்பகுதியில் காணற்கரிய சடாயு காணப்பட்டது.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

மக்கள் வீடியோக்கள் எடுக்க சுற்றி இருக்கையில் மலை உச்சியில் தன் பெரிய இறக்கையை விரித்து பறக்க தயாராகிக் கொண்டிருக்கும் பறவை ஆனது இதிகாசமான இராமாயணத்தில் வரும் ஜடாயு எனக் குறிப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகிறது.

Advertisement

Facebook link | archived link 

” அபூர்வ ஜடாயு பறவை வகை இனத்தினை பெரும்பாலும் யாரும் பார்க்கவே முடியாது. பறவைகள் சரணாலயத்தில் இவ்வளவு காலம் இருந்து அதன் சுயத்தை மறந்து முதன் முதலில் பறக்க யத்தனித்து கற்கும் காட்சி. இதனை பறவைகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் வீடியோ பதிவு செய்தனர் ” என ஓர் முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ உடன் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு முகநூல் பதிவில், கேரளாவில் சடயமங்கலம் வனப்பகுதியில் காணப்பட்ட ஜடாயு எனப் பரவி வருகிறது.

உண்மை என்ன ? 

ஜடாயு எனும் வைரல் செய்யப்படும் வீடியோவில் இருக்கும் பறவையின் பெயர் கான்டோர். தெற்கு அமெரிக்காவின் பகுதிகளில் உள்ள அண்டெஸ் மலைப்பகுதியில் காணப்படும் அண்டென் கான்டோர் மற்றும் ஐக்கிய அமெரிக்க, அரிசோனா, கலிஃபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் கலிஃபோர்னியா கான்டோர் ஆகிய இரு கழுகுகளுக்கும் பொதுவாக அழைக்கும் பெயரே கான்டோர்.

Advertisement

Youtube link | archived link 

ஜடாயு என பரப்பப்படும் கான்டோர் பறவையின் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல. 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் யூடியூப்-ல் கான்டோர் பறவை மலையின் உச்சியில் பறக்க தயாராகும் வீடியோ பதிவாகி இருக்கிறது. 2014-ம் ஆண்டில் பதிவான வீடியோவில், ஒரு கூண்டில் இருந்து வெளியே வரும் பறவை பறக்க தயாராகும் காட்சியை சுற்றி இருப்பவர்கள் வீடியோ எடுக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

The dodo என்ற இணையதளத்தில் அளிக்கப்பட்ட தகவலில், ” இந்த கான்டோர் பறவையின் பெயர் சயானி. அர்ஜென்டினாவின் கட்டமார்கா பகுதியில் விஷம் தாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சயானி காப்பாற்றப்பட்டு மீண்டும் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக ” வெளியாகி இருக்கிறது.

இராமாயணத்தில் ஜடாயு பறவை தாக்கப்பட்டு கீழே விழுந்தது போன்று கேரளாவில் சடயமங்கலம் எனும் மலைப்பகுதியில் பெரிய அளவிலான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அதைக் கொண்டு கேரளாவில் காணப்பட்ட ஜடாயு பறவை என கான்டோர் பறவையின் வீடியோவை பரப்பி உள்ளனர்.

நம்முடை தேடலில் இருந்து, கேரளாவில் காணப்பட்ட ஜடாயு பறவை என வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது. அர்ஜென்டினாவில் பாதிக்கப்பட்ட கான்டோர் பறவையை குணமாகி மீண்டும் வனத்திற்குள் அனுப்பி வைக்கும் வீடியோவே ஜடாயு பறவை என தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button