பிரதமர் மோடி ராமாயண தபால்தலையை எப்போது வெளியிட்டார் ?

பரவிய செய்தி
ராமாயண முத்திரை இன்று பிரதமரால் வெளியிடப்பட்டது மிக அழகு. நமது மிகப்பெரிய காவியம் இறுதியாக சில அங்கீகாரம் பெறுகிறது.
மதிப்பீடு
விளக்கம்
ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்குவதற்கு நடைபெற உள்ள அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அதனை மையப்படுத்தி பிரதமர் மோடி இன்று ராமாயணம் கதையை தபால் முத்திரையாக வெளியிட்டு உள்ளார் என இந்திய அளவில் பல மொழிகளில் ராமாயண முத்திரை பகிரப்பட்டு வருகிறது.
உண்மையில், ராமாயண தபால் முத்திரைகளை வெளியிட்டது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான். ஆனால் அது சமீபத்தில் நிகழவில்லை. தபால் முத்திரை புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் 2017 செப்டம்பர் 23-ம் தேதி ” I Support Narendra modi ” எனும் முகநூல் பக்கத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருந்துள்ளது.
2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி வாரணாசியில் உள்ள துளசி மனஸ் மந்திரில் ராமரின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்த 11 தபால்தலையை பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார். அப்போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இருந்துள்ளார். தபால்தலை வெளியிட்ட புகைப்படம் பிரதமர் மோடியால் ட்வீட் செய்யப்பட்டு உள்ளது.
Released postage stamps on the Ramayana. pic.twitter.com/E6wYPh2hmy
— Narendra Modi (@narendramodi) September 22, 2017
மேலும் படிக்க : அயோத்தியில் டைம் கேப்சூல் புதைக்கப்பட போவதில்லை-அறக்கட்டளை மறுப்பு !
மேலும் படிக்க : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஸ்பெயினில் கொண்டாட்டமா ?
இந்திய தபால்தலையில் ராமாயணம் கதை அம்சங்கள் கொண்ட முத்திரைகளை பிரதமர் மோடி வெளியிட்டது 2017-ம் ஆண்டில், ஆனால் அயோத்தியில் நடைபெறும் பூமி பூஜையை தொடர்புப்படுத்தி சமீபத்தில் வெளியிட்டதாக தவறான தகவல் பரவுகிறது.