வரிக்குதிரை வடிவில் பிறந்த பசுக் கன்றா ?

பரவிய செய்தி
வரிக்குதிரை வடிவில் பிறந்த பசுக் கன்று . ஷேர் செய்யுங்கள். அனைவரும் அறியட்டும்.
மதிப்பீடு
விளக்கம்
சில விலங்குகள் பார்ப்பதற்கு அரிதாக, வித்தியாசமாக தோன்றும். ஏன் என்றால் அவற்றை பற்றி நாம் பெரிதும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் தான்.
ஜூலை மாதம் 2018-ல் சிவகார்த்திகேயன் என்ற முகநூல் பக்கத்தில் , ” வரிக்குதிரை வடிவில் பிறந்த பசுக் கன்று ” என பதிவிடப்பட்டது. அந்த பதிவு 2 ஆயிரம் ஷேர்களை பெற்று இன்றும் ஷேர் ஆகி வருகிறது..
உண்மையில் அது கன்று தான், ஆனால் பசுக் கன்று அல்ல. போங்கோ எனும் அரிதான மலை மான் வகை விலங்கு..
இவை , மேற்கு ஆப்ரிக்கா, காங்கோ, தெற்கு சூடான் உள்ள மழைக்காடுகளில் காணப்படும். மேலும், பல்வேறு உயிரியல் பூங்காவில் அரிதாக காணப்படுகின்றன.
மான் வகையைச் சேர்ந்த போங்கோ பார்ப்பதற்கு பெரிதாக மற்றும் எடை அதிகமானதும் கூட எனலாம். அதன் எடை 225கி முதல் 410 கி வரை இருக்கும்.
இளம் கன்று பசுக் கன்று போல் தெரியலாம். ஆனால் வளர்ந்த பிறகு மானுக்கே உண்டான கொம்புகள் வளரும்.
போங்கோ மான் கன்றினை வரிக்குதிரை வடிவில் பிறந்த பசு என தவறான செய்தியை பரப்பி உள்ளனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.