This article is from Apr 07, 2019

சமூக வலைதளங்களில் பரவும் அதிசய உயிரினங்களின் படங்கள் பற்றி ?

பரவிய செய்தி

நேபாள நாட்டில் மட்டும் அரிதாக காணப்படும் ஹைக்கூ பறவை உயிரினம்.

மதிப்பீடு

விளக்கம்

சமூக வலைதளங்களில் அபூர்வமானவைகள் பற்றிய வீடியோ, புகைப்படங்கள் அதிகம் வைரலாகும். ஆனால், அதில் பெரும்பாலானவை போலியான செய்தியாக, தவறான தகவல்களாக மட்டுமே இருந்து உள்ளன.

படத்தில் காண்பிக்கப்பட்டு இருப்பது நேபாளம் நாட்டில் அரிதாக காணப்படும் ஹைக்கூ பறவை என kumar sanu என்பவர் தன் முகநூலில் பதிவிட்ட பதிவு   5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று உள்ளது.

ஓர் செய்தி பதிவிட்டால் அது உண்மையா இருக்குமா என நினைப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அரிதான உயிரினங்கள் என சமூக வலைதளங்களில் பகிரப்படுவை பெரும்பாலும் தவறான தகவல்களாகவே இருந்து உள்ளன.

நேபாள நாட்டில் காணப்படும் அரிதான உயிரினம் எனப் பகிரப்பட்ட புகைப்படத்தில் இருப்பது ஒருவர் கற்பனை செய்து வடிவமைத்த பொம்மை மட்டுமே. CMWyvern என்ற இணைய தளத்தில் இதனை உருவாக்கியவர் 2014-ல் இப்படத்தினை பதிவிட்டு ” cloud Antelope ” என பெயரிட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

பல நாடுகளில் பல மொழிகளில் இதே படத்தை பகிர்ந்து அரிதான உயிரினம் என வதந்திகளை பரப்பி உள்ளனர். சிலர் இது மழை வருவதை தெரிவிக்கும் உயிரினம் என புதிய கதைகளை கூட உருவாக்க வாய்ப்புகள் உண்டு.

மேலும் படிக்க : வினோத உருவம் உண்மையில் என்ன ?

இதற்கு முன்பாக, அரிதான விலங்குகள், மீன் என பல தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி அதனை போலி என நாம் நிரூபித்து இருக்கிறோம். அதனைப் பற்றியும் படிக்கவும்.

மேலும் படிக்க  : பாண்டிச்சேரி மீனவர்கள் பிடித்த அபூர்வமான மீனா ?

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader