19 புகைப்படக் கலைஞர்கள் 62 நாட்கள் காத்திருந்து எடுத்த வீடியோவா?| கிரண் பேடி பதிவு.

பரவிய செய்தி
இந்த பறவை தமிழில் சுரகா என அழைக்கப்படும். இந்த வீடியோவை 19 புகைப்படக் கலைஞர்கள் 62 நாட்கள் காத்திருந்து எடுத்துள்ளனர். அசாதாரணமான பறவையின் வீடியோவை பகிருங்கள்.
In Tamil it is called Suraga bird. It took 19 photographers 62 days to capture this video.
Share the video of this unusual bird.
I recvd this. Am Sharing it further as recvd. pic.twitter.com/eYZBjXKZfP— Kiran Bedi (@thekiranbedi) November 29, 2019
மதிப்பீடு
விளக்கம்
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நவம்பர் 29-ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஓர் அரிதான பறவை பாடும் வீடியோவை பதிவிட்டு, அப்பறவையை தமிழில் சுரகா என அழைப்பதாகவும், அந்த வீடியோவை 19 புகைப்படக் கலைஞர்கள் 62 நாட்கள் காத்திருந்து எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
பல குரல்களில் மிமிக்கிரி செய்வது போன்று பாடும் பறவையின் வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு இருக்கிறது. மேலும், அந்த பறவையின் விலை 25 லட்சம் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். ஆகையால், வைரலாகி வரும் அரிதான பறவையின் வீடியோ குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவை தேடிய பொழுது, 2019 அக்டோபர் 7-ம் தேதி நியூஸ் 18 ஆங்கில செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியில் ” பல பறவைகளின் குரலை போன்று ஒலியை எலும்பும் லைரே பறவையின் வீடியோ இணையதளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது ” எனக் குறிப்பிட்டு உள்ளனர். மேலும், லைரே பறவை (Lyre Bird) ஆஸ்திரேலிய நாட்டின் அடிலெய்டு பகுதியில் இருக்கும் பூங்காவில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதேபோல், ABC Adelaide என்ற முகநூல் பக்கத்தில், அடிலெய்டு பகுதியில் இருக்கும் பல குரலில் பாடும் பறவை லைரே பறவையின் வீடியோ பிப்ரவரி 2019-ல் பதிவாகி இருக்கிறது. மேலும், தற்போது வைரலாகும் வீடியோவை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ” Four Finger Photography ” என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். அதிலும், 19 புகைப்படக் கலைஞர்கள் 62 நாட்கள் காத்திருந்து எடுத்ததாக கூறவில்லை .
2007-ல் பிபிசி ஸ்டுடியோ லைரே பறவை குறித்த ஆவணப்படம் ஒன்றை ” Amazing! Bird Sounds From The Lyre Bird – David Attenborough – BBC Wildlife ” எனும் தலைப்பில் வெளியிட்டு இருந்தது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, சுரகா எனும் பறவை பாடுவதை 19 புகைப்படக் கலைஞர்கள் 62 நாட்கள் காத்திருந்து எடுத்த வீடியோ என வைரலாகும் வீடியோ ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த லைரே பறவை என்பது அறிந்து கொள்ள முடிந்தது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.