கடலுக்கு அடியில் காட்சி தரும் துவாரகை எனப் பரவும் அனிமேஷன் வீடியோ !

பரவிய செய்தி
கடலுக்கு அடியில் இன்னும் உயிர் ததும்ப காட்ஷி தரும் துவாரகை… யுகங்கள் மாறினாலும் துளியும் மாறாத நம் ஸனாதனப் பொக்கிஷங்கள்…
மதிப்பீடு
விளக்கம்
கடலுக்கு அடியில் இன்னும் அழியாமல் காட்சி தரும் துவாரகையின் பகுதிகள் எனக் கூறி 25 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளுடன் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் கடலில் சிதலமடைந்த நிலையில் இருக்கும் மண்டபத்திற்குள் கிருஷ்ணர், ராதை சிலைகள் இருப்பது போன்று கான்பிக்கப்பட்டு உள்ளது.
கடலுக்கு அடியில் இன்னும் உயிர் ததும்ப காட்ஷி தரும் துவாரகை… யுகங்கள் மாறினாலும் துளியும் மாறாத நம் ஸனாதனப் பொக்கிஷங்கள்… pic.twitter.com/fsqGOSdNk4
— புதிய பாரதம் (@new_bharatham) August 22, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், 2023 மார்ச் 31ம் தேதி ‘Lost Temples’ எனும் முகநூல் பக்கத்தில் “Dwarka: India’s submerged ancient city ” எனும் தலைப்பில் இதே வீடியோ பதிவிடப்பட்டு இருக்கிறது. அதில், இந்த வீடியோவில் உள்ள துவாரகை நகரானது 3D மூலம் உருவாக்கப்பட்டது மற்றும் வீடியோ கிரெடிட் ‘Artz by Ram’ எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேற்கொண்டு, artz_by_ram எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடுகையில், 2023 மார்ச் 20ம் தேதி இவ்வீடியோ பதிவிடப்பட்டு இருக்கிறது. அதிலும், 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு எனக் கூறப்பட்டு உள்ளது.
View this post on Instagram
இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதேபோல் அனிமேஷன் வீடியோக்கள் பல பதிவிடப்பட்டு உள்ளன. இதையே உண்மை என நினைத்து சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : குஜராத் கடலுக்கடியில் துவாரகை மாளிகையை நாசா கண்டறிந்ததாக வதந்தி !
மேலும் படிக்க : கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா பகுதியின் புகைப்படங்களா ?| உண்மை என்ன ?
இதற்கு முன்பாகவும், கடலுக்கு அடியில் உள்ள துவாரகை நகரம் எனக் கூறி இணையத்தில் கிடைக்கும் அனிமேஷன் படங்கள் மற்றும் வீடியோக்களை உண்மைப் போல் பரப்பி இருந்தனர். அதுகுறித்தும், நாம் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், கடலுக்கு அடியில் காட்சி தரும் துவாரகை எனப் பரவும் வீடியோ அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.