எலி சோப்பு போட்டு குளிக்குதா ?

பரவிய செய்தி

மனிதர்களை போன்று சோப்பு போட்டு குளிக்கும் எலி. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

மதிப்பீடு

சுருக்கம்

மனிதனைப் போன்று சோப்பு போட்டு குளிக்கும் எலி என்று தவறான செய்திகளுடன் வைரலாகி வரும் வீடியோவில் இருப்பது, pacarana தனது மீது அருவருப்பாக இருந்த சோப்பு நுரையை நீக்க முயன்றது ஆகும்.

விளக்கம்

மனிதர்களை போல் எலி உடல் முழுவதும் சோப்பு தேய்த்து குளிக்கும் வித்தியாசமான வீடியோ காட்சியானது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் பரவத் தொடங்கிய அந்த வீடியோ காட்சிகளை இதுவரை லட்சக்கணக்கான பேர் பார்த்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.

Advertisement

பெரு நாட்டைச் சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் எலி ஒன்று உடல் முழுவதும் சோப்பால் சுத்தம் செய்யும் காட்சியை கண்டு, அதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் கொறிணி பிராணிகளின் பன்முகத்தன்மை பற்றி பயிலும் பரிணாமஉயிரியலாளர் டால்ஸ் க்ரேண்ட்ஜெல், வீடியோவில் இருப்பது கொறிணி வகையைச் சேர்ந்த pacarana என்னும் உயிரினம் என்று கூறியுள்ளார்.

Pacarana:

pacarana தெற்கு அமெரிக்காவில் காணப்படும் அரிதான மற்றும் மிகவும் மெதுவாக நகரும் உயிரினம் ஆகும். இவை கொறிணி வரிசை முறையை சேர்ந்தவை. எலிகள் போன்று உணவுகளை கொறித்து உண்பவை. Pacarana-வை அப்பகுதி மக்கள் paca என்று அழைப்பர். இவற்றிற்கு வால் மிகச்சிறியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

America Fancy Rat and Mouse Association-ன் தலைவரான கிரேன் ராப்பின்ஸ், மனிதனை போன்று எலி குளிப்பதாகக் கூறுவது போன்று, எலிகள் எல்லாம் அவ்வாறு செய்வதில்லை.

“ இது எலி அல்ல. இது பார்ப்பதற்கு கொறிணி பிராணிகளான pacarana போன்று உள்ளது. இவை யாரோ ஒருவரின் வளர்ப்பு பிராணியாக இருக்கலாம். பார்ப்பதற்கு அழுக்காக இருப்பதனால் அதை குளிக்க வைத்திருக்கலாம். எலி, பூனை போன்ற செல்லப் பிராணிகள் எப்பொழுதும் குளிப்பதை எதிர்பார்ப்பதில்லை “

இதில், தன் உடலை சுத்தம் செய்து குளிப்பது போன்று தோன்றினாலும் அதற்கு காரணம் அதன் மீது மனிதர்கள் யாரேனும் சோப்பு அல்லது ஷாம்பு போன்றவற்றை தடவி இருக்க வேண்டும். தனது உடலின் மீது இருந்த சோப்பு நுரையினை துடைக்கும் போது குளிப்பது போன்று தெரிந்துள்ளது என்றுள்ளார்.

அந்த உயிரினத்தின் மீது யாரோ ஒருவர் சோப்பு அல்லது ஷாம்பு போன்றவற்றை தேய்க்காமல் இவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், வீட்டில் ஒருவர் வளர்த்து வரும் எலியை குளிக்க வைப்பதற்காக அதன் மீது சோப்பினை தடவும் போது, அதை நீக்குவதற்காக எலி உடல் முழுவதும் தேய்ப்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button