திமுக ஆட்சியில் ரேசன் அரிசி மூட்டையை சாக்கடையில் கொட்டி அள்ளுவதாக பரவும் 2017-ல் வெளியான வீடியோ !

பரவிய செய்தி

திமுக அரசின் ஆட்சி அவலம். பள்ளத்தில் லாரி பதியாமல் இருக்க ரேசன் கடை ஊழியர்கள் ரேசனுக்கு வந்த அரிசி மூட்டை வைத்து லாரியை கடக்க செய்து சாக்கடையில் கொட்டிய அரிசியை மீண்டும் அள்ளி ரேசன் கடைக்கு கொண்டு செல்லும் காணொளி காட்சி.

மதிப்பீடு

விளக்கம்

ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வரும் லாரி சாலையில் உள்ள பள்ளத்தில் பதியாமல் இருக்க ரேசன் கடை ஊழியர்கள் அரிசி மூட்டை வைத்து லாரியை கடக்க செய்கிறார்கள், அப்போது மூட்டையில் இருந்து சாக்கடையில் கொட்டிய அரிசியை மீண்டும் அள்ளி ரேசன் கடைக்கு கொண்டு செல்லும் 3 நிமிட வீடியோ காட்சி ஒன்று திமுக ஆட்சியைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Archive link 

உண்மை என்ன ? 

ரேசன் அரிசி மூட்டையை லாரி கடக்க பயன்படுத்திய வீடியோ குறித்து தேடிய போது, 2017-ம் ஆண்டில் சமூக வலைதளங்களிலும், ஊடகத்திலும் இவ்வீடியோ பதிவாகி இருந்ததை பார்க்க முடிந்தது.

2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் 36வது வார்டில் உள்ள ரேசன் கடைக்குஅரசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்காமல் இருக்க அரிசி மூட்டையை வைத்து உள்ளனர். லாரியின் எடை தாங்காமல் கோணிப்பை கிழிந்து மொத்த அரிசியும் வீணான அவலம் ” என பாலிமர், புதியதலைமுறை உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், திமுக அரசின் ஆட்சியில் பள்ளத்தில் லாரி பதியாமல் இருக்க ரேசன் கடை ஊழியர்கள் ரேசனுக்கு வந்த அரிசி மூட்டை வைத்து லாரியை கடக்க செய்து சாக்கடையில் கொட்டிய அரிசியை மீண்டும் அள்ளி ரேசன் கடைக்கு கொண்டு செல்லும் காட்சி எனப் பரப்பப்படும் வீடியோ கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader