விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.328 கோடி முறைகேடு|யார் தெரியுமா ?

பரவிய செய்தி

” Accidental Prime Minister” படத்தை உருவாக்கியவர்கள் விவசாயிகள் கடனாக ரூ.5400 கோடியை பிஜேபி ஆட்சியில் பெற்றுள்ளனர். மேலும், அவர்களின் பெயர் ரூ.328 கோடி சர்க்கரை ஆலை முறைகேட்டில் இடம்பெற்று உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பற்றி ” Accidental Prime Minister ” என்னும் படத்தை இயக்கிய விஜய் ரத்னாகர் குட்டே ஜி.எஸ்.டி முறைகேட்டில் கைது செய்யப்பட்டார். அவரின் தந்தை ரத்னாகர் குட்டே மீது விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து கடன் பெற்றதாக வழக்கு உள்ளது.

விளக்கம்

Accidental Prime Minister ” எனும் திரைப்படம் முன்னாள் இந்திய பிரதமாரான மன்மோகன்சிங்கின் பிரதமர் காலம் பற்றி எடுக்கப்பட்ட படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தரப்பில் எதிர்ப்பு இருத்தது. காரணம், திரைப்படத்திற்கு பின்னால் பிஜேபி கட்சி இருப்பதாகவும், இப்படம் காங்கிரஸ் பற்றி உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிப்பதாகவும் இப்படத்தின் ட்ரைலேர் வந்த போதே சர்ச்சையாகி இருந்தது.

Advertisement

ஜி.எஸ்.டி முறைகேடு :  

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பற்றி  ” Accidental Prime Minister ” படத்தை இயக்கியவர் விஜய் ரத்னாகர் குட்டே ஆவார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பே விஜய் ரத்னாகரின் VRG Digitial Crop Pvt ltd நிறுவனம் 2017 ஜூலையில் இருந்து போலியான விலை பட்டியலை காண்பித்ததோடு, ஜி.எஸ்.டி வரி விதிப்பில் திருப்பி பெறும் தொகையில் 28 கோடியை பெற்றோம் என தவறான தகவலை அளித்து உள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டன.

விஜய் ரத்னாகர் குட்டேவை கைது செய்த மும்பையின் Directorate General of Goods and Services Tax Intelligence(DGGSTI) கூறுகையில்  , ஜி.எஸ்.டி முறைகேட்டில் குறைந்தபட்சம் ரூ.34 கோடி வரை முறைகேடு நடந்து இருக்கும் என கூறியுள்ளனர். இந்த வழக்கில் விஜய் ரத்னாகர் குட்டே பிணையில் வெளி வந்தார்.

விவசாயிகள் பெயரில் முறைகேடு : 

” Accidental Prime Minister ” திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ரத்னாகரின் தந்தை ரத்னாகர் குட்டே மீது விவசாயிகள் கடன் பெயரில் போலி ஆவணங்கள் சமர்பித்து தன் சர்க்கரை ஆலைக்கு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் மொத்தம் ரூ.328 கோடி கடன் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

2015 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள ” Gangakhed Sugar Factory ” கருப்பு விவசாயிகள் மற்றும் ஆலை உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் போலியான ஆவணங்களை சமர்பித்து 5 பொதுத்துறை வங்கி மற்றும் ஒரு தனியார் வங்கி என மொத்தம் ரூ.328 கோடி முறைகேடு செய்த விவகாரத்தை ஆய்வு செய்ய மாநில காவல் பிரிவான ” Economic Offence Wing “க்கு மும்பை நீதிமன்றத்தின் அவுரங்கபாத் அமர்வு 2017 ஜூலையில் உத்தரவிட்டது.

ரத்னாகர் குட்டே Gangakhed Sugar Factory  இயக்குனர்களில் ஒருவர். அம்மாநிலத்தில் பிஜேபி கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரீய சமாஜ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். 2014-ல் ஆர்.எஸ்.பி மற்றும் பிஜேபி கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

சர்க்கரை ஆலை விவசாயிகள் பெயரில் வங்கி முறைகேட்டில் இறந்தவர்கள் பெயரில் கூட கடன் பெற்ற தொகையையும் செலவிட்டதாக மனுதாரர் தெரிவித்து இருக்கிறார். மகாராஷ்டிராவின் சட்ட சபையின் எதிர்க்கட்சி தலைவர் தனஞ்சய் முண்டே கூறுகையில், விவசாயிகள் பெயரில் போலியான ஆவணங்களை வைத்து தொழிலதிபர் பாதுகாப்பாக ரூ.5,400 கோடி கடன் பெற்று இருக்கிறார் ” என குற்றம்சாற்றியுள்ளார்.

ஏற்கனவே, தொழிலதிபர்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வது அரங்கேறும் நாட்டில் மீண்டும் விவசாயிகள் பெயரில் கடன் பெறுவது கண்டிக்கத்தக்கது. யார் ஆட்சியில் இருந்தாலும் தொழிலதிபர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு முடிவில்லாமல் இருக்கிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button