“ ரிங்கா ரிங்கா ரோசஸ் “ இங்கிலாந்தின் நாட்டுப்புற இழவு பாடலா ?

பரவிய செய்தி

ரிங்கா ரிங்கா ரோசஸ் “ என்ற சிறுவர் பாடல் 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பாடப்பட்ட நாட்டுப்புற இழவு பாடல் என்பதை யாரும் அறியவில்லை.

மதிப்பீடு

சுருக்கம்

ரிங்கா ரிங்கா ரோசஸ் “ வரிகள் இடம்பெறும் பாடல் பதிப்புகள் 19-ம் நூற்றாண்டில் பலரும் மாற்றம் செய்து உருவாகியவை.

கிராமப்புற இழவு பாடல் என்பது தவறான தகவலே ! ரிங்கா ரிங்கா ரோசஸ் பாடல் உலகம் முழுவதும் மழலையர் பள்ளிகளில் பாடல்களாக உள்ளன.

விளக்கம்

மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் பிரபலமான பாடல்களில் மிக முக்கியமானது “ ரிங்கா ரிங்கா ரோசஸ் “ என்ற பாடல். முதல் நான்கு வரிகளை மட்டுமே பெரும்பாலானோர் அறிந்து இருக்க வாய்ப்புள்ளது. எனினும், அதற்கான அர்த்தத்தை யாரும் அறியவில்லை.

இந்நிலையில், “ ரிங்கா ரிங்கா ரோசஸ் “ பாடல் 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தைத் தாக்கிய ப்ளேக் நோய் பற்றிய நாட்டுப்புற இழவு பாடல் என செய்திகள் பரவி வருகிறது.

Advertisement

பாடலின் தொடக்கம் :

ப்ளக் ப்ளேக் “ எனும் நோய் 1347-ல் ஐரோப்பாவில் பரவி மக்களை கொத்துக் கொத்தாய் கொன்றது. இதேபோன்று 1665-ல் இதே ப்ளேக் நோய் லண்டனைத் தாக்கியது. இதனை மையப்படுத்தி தற்போது உள்ள “ ரிங்கா ரிங்கா ரோசஸ் “ பாடல் உருவாக்கப்பட்டது என பலரும் கூறுகின்றனர்.

“ Ring a Ring o roses

   A pocket full of posies

   Hush ! hush ! hush ! hush !

Advertisement

  We’re all tumbled down “

ப்ளேக் நோய் தாக்கினால் உடலில் சிவப்பு நிறத்தில் தடிப்பு ஏற்படும், அதற்காக பயன்படும் ஒருவகை பூ மற்றும் நோய் பாதித்தால் தும்பல் அறிகுறி உண்டாகும். இறுதியில் இறந்து விடுவோம் என்பதே இதன் அர்த்தம் என பரவி வருகிறது.

“ Ring a Ring o roses

   A pocket full of posies

   A-tishoo A-tishoo

  We all for down “

இருப்பினும், இன்றையப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் “ ரிங்கா ரிங்கா ரோசஸ் “ பாடலுக்கும் முன்பு இருந்ததாகக் கூறும் பாடலும் ஒன்றா என்றால் இல்லை என்பதே உண்மை.

பதிப்புகளின் தொடக்கம் :

1881 ஆம் ஆண்டில் “ ரிங்கா ரிங்கா ரோசஸ் “ என்ற சிறுவர் பாடல் அச்சுக்கு வருவதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாக வாய்வழி பாடல்களாக இருந்தது. “ Mother Goose or The old nursery rhymes “ என kate greenaway என்ற பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளியானது.

இதன் பின் பல நாடுகளில் பரவத் தொடங்கி பாடல் வரிகள் பிரபலமடைந்ததால் ப்ளேக் நோய் சார்ந்த வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு புதிய புதிய பதிப்புகளாக வெளியானது.

1883-ல் William Wells Newell வெளியிட்ட பாடல்,

“ Ring a ring a rosie

 A bottle full of  posie

 All the girl in our town

 Ring for little josie “ .

1898-ல் Alice Gomme வெளியிட்ட மற்றொரு பதிப்பு.

“ Ring a ring a roses

 A pocket full o posies

  Up-stairs and down-stairs

  In my lady’s chamber-

  Husher ! husher ! cuckoo! “

இவ்வாறு பல பாடல் பதிப்புகள் “ ரிங்கா ரிங்கா ரோசஸ் “ வரிகளை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு ஏற்றார் போல் வரிகளும், அர்த்தங்களும் மாற்றமடைந்து உள்ளன.

பலரும் கூறுவது போன்று அதே பாடலை பயன்படுத்தி வருகிறோம் என்றால், 120 ஆண்டுகள் அச்சு வடிவம் இன்றி வாய்வழி வார்த்தைகள் மாறாமல் பயணித்து வருவதற்கு வாய்ப்பில்லை எனலாம்.

“ நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் பலவற்றிக்கு அர்த்தங்கள் ஏதுமில்லை. அவ்வாறானதே ரிங்கா ரிங்கா ரோசஸ் வரிகளும், முன்பு நடந்ததை வைத்து அதே அர்த்தத்தில் பாடல்கள் உள்ளது என்பது தவறான ஒன்று. அர்த்தம் இல்லை என்றாலும் ஓசையினால் கேட்பதற்கு நன்றாக இருக்கும் வார்த்தைகள் பாடல்களில் இடம்பெறுவது வழக்கமானவையே “

ஆக, இன்றைய குழந்தைகள் படிக்கும் ரிங்கா ரிங்கா ரோசஸ் பாடல்கள் இங்கிலாந்து நாட்டின் நாட்டுப்புற இழவு பாடல் என்பது தவறான தகவல் என்று தெளிவாகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close