விபத்தில் இறந்த பெண்ணிடம் மோதிரத்தை திருடும் திமுக தொண்டர்| எப்பொழுது நிகழ்ந்தது ?

பரவிய செய்தி

புதுக்கோட்டையில் விபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய திமுக கரைவெட்டி கட்டிய திமுக பிரமுகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மதிப்பீடு

விளக்கம்

காரில் விபத்தில் இறந்தவர்களிடம் இருந்து திமுக கட்சியைச் சேர்ந்த ஒருவர் மோதிரத்தை திருடியதாக சமூக வலைதளங்களில் நியூஸ் கார்டு ஒன்றை காண முடிந்தது. அதுமட்டுமின்றி, இந்த செய்தியின் அடிப்படையில் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

இது தொடர்பாக செய்திகள் குறித்து தேடிய பொழுது கதிர் நியூஸ் , செய்தி புனல் என்ற இணையதளங்களில் மட்டும் அந்த நியூஸ் கார்டில் உள்ள செய்தி 2019 ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகி இருக்கிறது. சரி அதிகாரப்பூர்வ ஊடகங்களில் மோதிரத்தை திருடிய செய்தி வெளியாகி இருக்கிறதா என தேடினோம்.

ஊடக செய்தி :

நியூஸ் 7 செய்தியில், புதுக்கோட்டை கம்பன் நகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் அவரின் மனைவியும் தஞ்சை சென்றுவிட்டு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். கார் கந்தர்வகோட்டை பகுதியை கடக்கும் பொழுது பாலத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாக்கியது. இதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் உடல்கள் காரில் இருந்து மீட்கப்பட்டு தனியாக வைக்கப்பட்டு இருக்கும் பொழுது அங்கிருந்தவர்கள் இறந்தவர்களை சோகத்துடன் பார்த்து கொண்டு இருந்துள்ளனர். அந்நேரத்தில், இறந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை கூட்டத்தில் இருந்தவர் சிரமப்பட்டு பறித்தது புகைப்படத்தில் தெளிவாய் பதிவாகி இருக்கிறது என வெளியாகி இருந்தது.

Advertisement

பழைய செய்தி :

ஆனால், நியூஸ் 7 சேனலில் செய்தி வெளியாகியது சமீபத்தில் இல்லை. ஆகஸ்ட் 17, 2016-ம் ஆண்டில் என இடம்பெற்று இருக்கிறது. மேலும், இது குறித்து தேடிய பொழுது 2016-ல் சில இணையதளங்களில் செய்தி வெளியாகி இருப்பது தெரிய வந்தது.

திமுக கரைவேட்டி :

விபத்து நிகழ்ந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இறந்த பெண்ணின் கையில் இருந்து திமுக கரைவேட்டி கட்டியவர் மோதிரத்தை எடுக்கும் காட்சியும், மற்றொரு புகைப்படத்தில் பெண்ணின் கையில் மோதிரம் இல்லாமல் இருப்பதும் பதிவாகி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக திமுக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், பிரமுகர்கள் சண்டையிட்டு மாட்டிக் கொள்ளும் செய்திகளை தொடர்ந்து படித்து வருகிறோம். அதில், இறந்தவரின் கையில் இருந்து மோதிரத்தை திருடுவதும் தற்பொழுது சேர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் சம்பவத்தை மடைமாற்றவா ?

திருப்பூரில் கடை வியாபாரியிடம் கிருஷ்ண ஜெயந்திக்கு பணம் கேட்டு தகராறு செய்து தாக்கிய 5 விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடை வியாபாரியிடம் தகராறு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. அதனை மறக்கடிக்க பழைய செய்தியை வெளியிட்டு இருப்பார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

முடிவு :

இறந்தவரின் கையில் இருந்து திமுக கரைவேட்டி கட்டிய ஒருவர் மோதிரத்தை திருடினார் என சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்தி உண்மையே. அது தொடர்பான செய்தியானது நியூஸ் 7 செய்தியில் வெளியாகி இருக்கிறது. ஆனால், அவர் யார் என்பது குறித்த விவரங்கள் செய்தியில் வெளியாகவில்லை.

இருப்பினும், 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த செய்தியை தற்பொழுது நடந்தது போன்று வெளியிட்ட செய்திக்கு ஆயிரக்கணக்கான பார்வையையும், மீம் பதிவிற்கு லைக்களையும் பெற்று உள்ளனர் என்பதையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது .

இறந்தவரிடம் இருந்து மோதிரத்தை திருடும் அளவிற்கு மனம் கொண்ட மக்களும் இருக்கச் செய்கிறார்கள் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close