This article is from Nov 17, 2019

WWE புகழ் “தி ராக்” பயங்கரமான சண்டை காட்சியில் இறந்து விட்டாரா ?

பரவிய செய்தி

” தி ராக் ” என அழைக்கப்படும் நடிகர் தவானே ஜான்சன் தன்னுடைய 47-வது வயதில் பயங்கரமான சண்டை காட்சியில் ஈடுபட்ட பொழுது தோல்வி அடைந்து இறந்து விட்டார் – CNN

மதிப்பீடு

விளக்கம்

WWE எனும் பொழுதுபோக்கு சண்டை நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த ” தி ராக் ” என அழைக்கப்படும் தவானே ஜான்சன் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர். குறிப்பாக, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இப்படி அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்து இருக்கும் திரைப்படங்கள் பலவற்றில் நடித்து வரும் தவானே ஜான்சன் சமீபத்தில் திரைப்படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிக்காக நடைபெற்ற ஷூட்டிங் போது இறந்து விட்டதாக கூறி உலக அளவில் முன்னணி செய்தி நிறுவனங்களின் பெயரில் வெளியாகி வருகிறது.

47 வயதான ” ராக் ” இறந்து விட்டதாக உலக அளவில் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், ராக் இறந்து விட்டதாக பரவி வரும் செய்திகள் யாவும் உண்மையில்லை. அவர் சண்டை காட்சிகளின் போது இறந்து விட்டதாக வைரலாகி வரும் செய்திகள் வதந்திகளே.

இதில், CNN , BBC உள்ளிட்ட முன்னணி ஊடகங்களின் பெயரில் போலியான செய்திகள் வெளியாகி வருகின்றனர்.  ” ராக் ” இறந்து விட்டதாக வதந்திகள் பரவுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக , 2014-ம் ஆண்டில் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்பட சண்டை காட்சியின் பொழுது இறந்து விட்டதாகவும் , 2017-ல் பயங்கரமான சண்டை காட்சியில் இறந்து விட்டதாகவும் வதந்திகள் பரவி இருந்தன.

மேலும் படிக்க : Mr.bean கார் விபத்தில் இறந்து விட்டாரா ?

பிரபலங்கள் இறந்து விட்டதாக வதந்திகளை பரப்புவது அடிக்கடி நிகழ்வதே. இதற்கு முன்பாக, நகைச்சுவை நடிகர் Rowan atkinson (மிஸ்டர் பீன்) தன்னுடைய 62 வயதில் கார் விபத்தில் இறந்து விட்டதாக வதந்திகள் பரவி இருந்தன. மிஸ்டர் பீன் இறந்து விட்டதாக 4 முறை வதந்திகள் பரவி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இந்திய பிரபலங்களும் அடங்கும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader