பிரிட்டனின் பிரதமரானதும் ரிஷி சுனக் மனைவியுடன் கோமாதா பூஜை செய்தாரா ?

பரவிய செய்தி

கோமாதா பூஜை செய்யும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்…!!

கிறிஸ்தவ நாடான இங்கிலாந்தில் பிரதமர் கோமாதா பூஜை செய்து அந்த நாட்டை இந்து நாடாக மாற்றுகிறார்.

Archive twitter link

மதிப்பீடு

விளக்கம்

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ள ரிஷி சுனக் கோமாதா பூஜை செய்ததாக  நியூஸ் அப்டேட் 360 எனும் முகநூல் பக்கம் வீடியோ ஒன்றினை பதிவிட்டு உள்ளது. 

மேலும், கிறிஸ்தவ நாடான இங்கிலாந்தினை கோமாதா பூஜை செய்து இந்து நாடாக அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் மாற்றுவதாக தமிழ்நாடு பாஜக சிந்தனையாளர் பிரிவின் பொறுப்பாளர் கல்யாண் ராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

உண்மை என்ன ?

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியைக் கடந்த 20ம் தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து ரிஷி சுனக் போட்டியின்றி பிரிட்டனின் பிரதமரானார்.

ரிஷி சுனக் பிரதமரானதைத் தொடர்ந்து இவர் இந்து என்றும், இந்திய வம்சாவளி என்றும் பலரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரிட்டனின் பிரதமர் கோமாதா பூஜை செய்தார் என இவ்வீடியோ பகிரப்படுகிறது.

அந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என இணையத்தில் தேடினோம். பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக் கோமாதா பூஜை செய்தது தொடர்பான புகைப்படங்கள் பக்திவேதாந்த மேனர் (Bhaktivedanta Manor) என்ற பேஸ்புக் பக்கத்தில் கிடைக்கப்பட்டது. ஆனால் அந்த புகைப்படமானது 2022, ஆகஸ்ட் 18ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. 

இது குறித்து Deccan Herald 2022, ஆகஸ்ட் 26ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பிரிட்டனின் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு லண்டனில் உள்ள பக்திவேதாந்த மேனருக்கு சென்றுள்ளார். மேலும் அங்கு கோமாதா பூஜை செய்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிஷி சுனக் கோமாதா பூஜை செய்தது 2022 ஆகஸ்ட் மாதம். அவர் பிரதமராகப் பதவி ஏற்றது 2022, செப்டம்பர் 24ம் தேதி. அவர் பிரதமராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாக செய்த கோமாதா பூஜையினை, தற்போது செய்ததாகவும், கிறிஸ்தவ நாட்டினை இந்து நாடாக மாற்றுகிறார் என்றும்  பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க : ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரான பின் இஸ்கான் கோவிலுக்குச் சென்றதாகப் பரவும் பழைய வீடியோ !

இதே போல, ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முதலாக லண்டனில் உள்ள இஸ்கான் கோயிலுக்குச் சென்று இஸ்கான் குருக்களிடம் ஆசி பெற்றதாகப் பழைய வீடியோவை தற்போது நிகழ்ந்தது போலப் பரப்பி வருகின்றனர்.

முடிவு :

நம் தேடலில், பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக் மனைவியுடன் கோமாதா பூஜை செய்ததாக பரப்பப்படும் வீடியோ அவர் பிரதமராவதற்கு முன்னதாக 2022 ஆகஸ்ட் 31ம் தேதி செய்தது என அறிய முடிகிறது. 

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader