நடிகர் ரஜினிக்கு ரோபோ சங்கர் ஆதரவு என போலி ட்விட்டர் பதிவு !

பரவிய செய்தி
தலைவர் எப்போதும் உண்மையே பேசிவிடுகிறார். உண்மையை சொன்னால் ஏன் சிலருக்கு எரியுது என்று தெரியவில்லை என ரோபோ சங்கர் ட்விட்டரில் பதிவு.
மதிப்பீடு
விளக்கம்
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து சர்ச்சையாகி எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், ரஜினிக்கு ஆதரவாக நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ட்விட்டரில் ” தலைவர் எப்போதும் உண்மையே பேசிவிடுகிறார். உண்மையை சொன்னால் ஏன் சிலருக்கு எரியுது என்று தெரியவில்லை ” என பதிவிட்டு உள்ளதாக ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும், தினத்தந்தி இணையதளத்தின் சினிமா செய்தியில் ” ரஜினிக்கு பேரரசு, ரோபோ சங்கர் ஆதரவு ” என்ற தலைப்பில் ரோபோ சங்கர் ட்விட்டரில் ஆதரவாக கருத்து பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரோபோ சங்கர் பதிவிட்டதாக கூறும் ட்விட்டர் பக்கம் தற்பொழுது பயன்பாட்டில் இல்லை, நீக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு ரோபோ சங்கர் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கமாகும்.
இதற்கிடையில், போலி ட்வீட் குறித்து நடிகர் ரோபோ சங்கர் விளக்கம் அளித்து உள்ளார். ” நான் ட்விட்டரில் இல்லை; ரஜினியின் கருத்திற்கு ஆதரவு என்று என்னுடைய பெயரில் போலியாக ட்வீட் செய்துள்ளனர். இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சர்ச்சையை யாரோ ஏற்படுத்தியுள்ளனர் ” எனக் கூறியுள்ளார்.
செய்தியின் உண்மைத்தன்மை அறியாமல் முதன்மை செய்தி ஊடகங்களும் தவறான செய்தியை வெளியிடுவது சமீபகாலங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. போலியான கணக்குகளின் எண்ணிக்கை சமூக வலைதளங்களில் அதிகமென்பதால் சரியான செய்தியை அறிந்து பகிருங்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.