9 வயதில் 9 மாதக் கருவை சுமக்கும் ரோஹிங்கியா முஸ்லீம் குழந்தையா ?

பரவிய செய்தி

9 வயது குழந்தை வயிற்றில் 9 மாதக் கரு. கள்ளதனமாக இந்தியா வந்த ரோஹிங்கியா முஸ்லீம்கள் கும்பலில் ஒரு வருடத்தில் 60,000 குழந்தைகள் பிறந்துள்ளது. இவர்களுக்கு குடியுரிமை தந்தால் நாம் அகதிகள்.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

இனப்படுகொலை காரணமாக மியான்மர் நாட்டில் இருந்து தங்களின் அண்டை நாடுகளுக்கு அகதிகளாய் தஞ்சம் அடையும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் குறித்த தவறான தகவல் சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கமாகி போனது. ரோஹிங்கியா முஸ்லீம்கள் குறித்த பதிவுகளில் வதந்திகள் குறித்து நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

Advertisement

மேலும் படிக்க : இந்தியாவில் சொகுசாக வாழும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதியா ?| உண்மை என்ன?

இந்தியாவில் கள்ளத்தனமாக தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா முஸ்லீம்களின் கூட்டத்தில் ஒரே வருடத்தில் 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், 9 வயது குழந்தை 9 மாதக் கருவுடன் இருப்பதாக வயிறு பெரிதாக இருக்கும் குழந்தையின் புகைப்படத்தை முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

வயிறு பெரிதாக வீங்கி இருக்கும் குழந்தையுடன் மருத்துவர் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், Getty Image எனும் புகைப்பட  விற்பனை தளத்தில் 2003-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

அதில், ” பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்கின் மனைவி பெர்னாடெட் ப்ரிக் 2003-ம் ஆண்டு மே 27-ம் தேதி ஆப்கானிஸ்தானின் காபூலில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்காக அர்ப்பணித்த முதல் மருத்துவமனை ” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், சிறந்த சிகிச்சைக்காக பரீஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட உள்ள காபூலில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தையை Dr .Cheysson பரிசோதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

வயிறு பெரிதாக இருக்கும் குழந்தை ரோஹிங்கியா முஸ்லீம் குழுவைச் சேர்ந்தவர் அல்ல, ஆப்கானிஸ்தான் நாட்டில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை என்பதை getty image தளத்தின் மூலம் அறிய முடிகிறது.

60,000 குழந்தைகள் : 

இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லீம் மக்களில் ஒரே ஆண்டில் 60,000 குழந்தைகள் பிறந்துள்ளது என்பது தவறான தகவல். 2018-ம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் ” 60 children are born every day in Rohingya shelter camps in Bangladesh ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில், பங்களாதேஷ் நாட்டில் உள்ள ரோஹிங்கியா மக்களின் முகாம்களில் நாளொன்று 60 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

“சேவ் தி சில்ட்ரன் ” எனும் திட்டத்தின் முந்தைய ஆய்வில், ஏற்கனவே கூட்டமாக இருக்கும் ரோஹிங்கியா முகாம்களில் 2018-ல் 48,000 குழந்தைகள் பிறக்கும் எனக் கூறி இருந்தனர்.

பங்களாதேஷ் நாட்டின் யுனிசெப் பிரதிநிதி எட்வார்ட் பீக்பெடர் , ” ஒரு நாளைக்கு சுமார் 10 குழந்தைகள், வீட்டில் இருந்து விலகி, இடம்பெயர்வு, வன்முறை, அதிர்ச்சி மற்றும் சில சமயங்களில் பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து தப்பிய தாய்மார்களுக்கு பிறப்பதாக ” கூறியுள்ளார்.

பங்களாதேஷ் நாட்டில் அகதிகளாய் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளன. இப்படி அகதி முகாம்களில் பிறகும் குழந்தைகள் சுகாதாரப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லீம்களின் எண்ணிக்கை செப்டம்பர் 2017 வரையில் 40,000 ஆக இருந்துள்ளது. தற்போதைய ஆண்டில் எண்ணிக்கை உயர்ந்து இருக்கக்கூடும் என்றாலும், இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா மக்களின் எண்ணிக்கை குறித்த சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முகாம்களில் வருடத்திற்கு 60,000 குழந்தைகள் பிறப்பதாக கூறும் தகவல் தவறானவையே.

மேலும் படிக்க : ரோஹிங்யா முஸ்லிம் பிரிவில் 10 வயது குழந்தை கர்ப்பமா ?

இதற்கு முன்பாக, 2017-ல் ரோஹிங்கியா முஸ்லீம்களின் கூட்டத்தில் 10 வயது குழந்தை கர்ப்பமாக இருப்பதாக அதே வதந்தியை வேறு குழந்தையின் புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பரப்பி இருந்தனர். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 12 வயது குழந்தையின் படத்தைப் பயன்படுத்தி ரோஹிங்யா முஸ்லிம் குழந்தை என தவறாக பரப்பி உள்ளதாக நாம் விரிவாக கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button