நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரா ?

பரவிய செய்தி

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற நடிகை ரோஜா அம்மாநிலத்தின் துணை முதல்வராக பதியேற்கிறார்.

மதிப்பீடு

சுருக்கம்

ஆந்திர அரசின் துணை முதல்வர்கள் பட்டியலில் நடிகை ரோஜாவின் பெயர் இல்லை. அதேபோன்று, அமைச்சரவை பட்டியலிலும் அவர் இடம்பெறவில்லை.

விளக்கம்

ஒய்.எஸ் ஜெகன் மோகன் தலைமையிலான அரசில் நடிகையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரான ரோஜாவிற்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுவதாக தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் புதிய முதல்வராக மே 30-ம் தேதி பதவியேற்றார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் அறிவிப்புகள் அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது. அதில், ஒன்று தான் ஆந்திர மாநிலத்திற்கு ஐந்து துணை முதல்வர்கள்.

ஆந்திராவில் ஒவ்வொரு சமூகத்தில் இருந்து ஒருவர் வீதம் மொத்தம் ஐந்து துணை முதல்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும் முடிவடைந்து உள்ளது.

பமுலா புஷ்பா ஸ்ரீவாணி, பில்லி சுபாஷ் சந்திர போஸ், அல்லா காளி கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ் , எல். நாராயண சுவாமி, அம்ஜாத் பாஷா ஆகியோர் ஆந்திராவின் துணை முதல்வர்களாக உள்ளனர். நடிகை ரோஜாவிற்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என தமிழகத்தில் பேசப்பட்டது போன்று, ஆந்திராவிலும் அவருக்கு அமைச்சரவை பதவி கிடைக்கும் என பேசப்பட்டது.

ஆனால், ரோஜாவின் பெயர் ஆந்திர அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை. எனினும், ரோஜாவிற்கு அமைச்சர் பதவிக்கு பதிலாக சபாநாயகர் பொறுப்பு அளிக்கப்படும் என செய்திகளில் வெளியாகி வருகிறது.

இதை அறியாமல், ரோஜா ஆந்திராவின் துணை முதல்வராகிறார் என தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தவறாக மீம் பதிவிட்டு வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button