ரோம் நாட்டில் விநாயகர் வழிபாடா ?

பரவிய செய்தி

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே ரோம் நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர் வழிபாடு. மிக அரியப் படம். மிகப் பழமையான ரோம் விநாயகரை நீங்களும் ஷேர் செய்யுங்கள்.

மதிப்பீடு

விளக்கம்

இந்து மதத்தில் முதற்கண் கடவுளான விநாயகர் மிகவும் பிரசித்து பெற்றவர். விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமின்றி இந்து மதம் பரவி உள்ள மற்ற நாடுகளிலும் நடைபெறுகிறது. எனினும், இந்து கடவுள் தோற்றம் குறித்த சரியான காலத்தை  எவரும் அறியலர்.

Advertisement

இதற்கிடையில், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக பழமையான ரோம் நாகரீகத்தில் கூட விநாயகர் வழிபாடு இருந்துள்ளது. ரோம் நாட்டிலேயே சிவன் மற்றும் பார்வதியின் மகனான யானையின் தலையைக் கொண்ட விநாயகரை வழிபாடு உள்ளனர். ரோம் நாட்டில் வணங்கிய விநாயகரின் அரியப் படத்தை அனைவரும் பகிருங்கள் என்று இப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் பரவி வந்துள்ளன. பல ஆண்டுகளாக இந்த செய்தி உண்மை என நம்பப்பட்டு வந்துள்ளது.

East Indies :

 தென்கிழக்கு இந்தியா என்பது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கியது. EAST INDIES என்பது மலேசியா, இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளை குறிக்கும்.

இத்தகைய ஈஸ்ட் இண்டீஸ் பகுதியில் இந்து மதத்தின் அடையாளங்கள் பரவலாக உள்ளன. இந்து மத நம்பிக்கை இங்குள்ள பல நாடுகளில் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

Quvenevadi :  

Advertisement

”  இந்து மத கடவுளான ixora என்றழைக்கப்படும் சிவனின் மகன் தான் Quvenevadi(விநாயகர்). 1723-1734 ஆம் ஆண்டுகளில் இந்த ஓவிய வேலைப்பாட்டை Bernard Picart என்பவர் செய்துள்ளார். 18-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த ஓவியம் பழமையான பொக்கிஷம் ஆகும் “.

” 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கண்கவர் தோற்றம் கொண்ட இதன் உண்மையான படத்தின் அச்சு 1789 ஆம் ஆண்டு லண்டனில் Dr. Hurd- Religious Rites & Ceremonies-க்கு வழங்கப்பட்டது “. தற்போது இந்த படத்தின் நகல்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கணபதி, விநாயகர், பிள்ளையார் என அழைக்கப்படும் இந்து மதக் கடவுளை Quvenevadi என்ற பெயரில் அழைத்துள்ளனர். Bernard Picart  18-ம் நூற்றாண்டில் இந்து மதத்தின் கடவுள்களின் தோற்றம் குறித்து செய்த ஓவிய வேலைப்பாட்டை ரோம் நாகரீகத்தை சேர்ந்தவை எனத் தவறான தகவலை பகிர்ந்து உள்ளனர்.

Youturn கடந்த மூன்றாண்டுகளாக உண்மைகண்டறிதல் பணியை செய்கிறது. இதற்கு உங்கள் துணையும் அவசியமாகிறது. அதற்கு நீங்கள் உறுப்பினர் சேர்க்கை மூலம் அதை சாத்தியமாக்கலாம். உறுப்பினர்களுக்கு சில சலுகையும் சிறப்புத்திட்டமும் உண்டு. சேர்ந்து எங்கள் பணியை நம் பணியாக மாற்றி மக்களின் ஊடகமாய் நாம் இருக்க வழி செய்யுங்கள்

Subscribe to Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker