அமேசானின் காட்டுத் தீயை அணைக்க ரொனால்டோ 3 விமானத்தை அனுப்பினாரா ?

பரவிய செய்தி

அமேசான் காட்டை அழித்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த உதவுவதற்கு 80,000 லிட்டர் தண்ணீர் அடங்கிய 3 விமானத்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ அனுப்பி உள்ளார்.

மதிப்பீடு

விளக்கம்

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் ஏற்படும் தீ சம்பவங்கள் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது.

Advertisement

இந்நிலையில், அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க 80,000 லிட்டர் தண்ணீர் அடங்கிய 3 விமானத்தை கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அனுப்பி உள்ளதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அமேசான் காடுகளில் எரியும் தீயை அணைக்க ரொனால்டோ 3 விமானத்தை அனுப்பினாரா என்பது குறித்து தேடினோம். ” Ronaldo Amazon “, Ronaldo 3 plane ” மற்றும் ” cristiano ronaldo 3 plane for amazon ” உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தேடிய பொழுது முதன்மை செய்தி தளங்களில் அப்படியான செய்திகள் வெளியாகவில்லை என்பதை காண முடிந்தது.

Advertisement

எனினும், ஆகஸ்ட் 22-ம் தேதி ரொனால்டோ தன் ட்விட்டர் பக்கத்தில், ” அமேசான் மழைக்காடுகள் உலகின் ஆக்சிஜனில் 20%-க்கும் அதிகமாக உற்பத்தி செய்கிறது. அதன் பகுதிகள் கடந்த 3 வாரங்களோ எரிந்து கொண்டிருக்கிறது. நமது கிரகத்தை காக்க உதவுவது நம்முடைய பொறுப்பாகும் ” எனப் பதிவிட்டு இருந்தார்.

இதைத் தவிர்த்து அமேசான் காட்டின் தீயை அணைக்க 80,000 லிட்டர் தண்ணீர் அடங்கிய 3 விமானத்தை அனுப்புவதாக குறிப்பிடவில்லை. ரொனால்டோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு ட்விட்டில் சமூக வலைதளங்களில் பரவும் தகவலை பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ட்விட் செய்து இருக்கிறார்.


பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின் படி, பிரேசில் நாட்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் 74,000 தீ சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு உள்ளனர். இதற்கு முன்பாக 2016-ம் ஆண்டில் நிகழ்ந்த 68,000 தீ சம்பவங்களே அதிகபட்சமாக இருந்தது.

மேலும் படிக்க : காட்டுத் தீயால் அழிந்து வரும் அமேசான் காடுகள் | மனித பிழையும் காரணமா ?

அமேசான் காட்டுத் தீயை அணைக்க பல நாடுகளும் தங்களின் உதவியை அளிக்க முன்வந்துள்ளனர். கனடா நாட்டின் அதிபர் ஜஸ்டின் தண்ணீர் நிரப்பிய விமானங்களை அனுப்பி உதவுவதாக அறிவித்து உள்ளார்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button