ஆர்.எஸ்.எஸ், பாஜக சக்தி வாய்ந்தவை என தாலிபான்கள் பேசுவதாக வதந்தி வீடியோ!

பரவிய செய்தி

இந்தியாவில் பிஜேபி இருக்கும் வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி ஆகியவை இந்தியாவில் சக்திவாய்ந்தவை என்பதை தலிபான்கள் ஏற்றுக்கொண்டனர், இந்தியா தாக்கப்பட வேண்டும் என்றால், அது எந்த நாட்டாலும் முடியாது. முதலில் பிஜேபியை அகற்றனால் மட்டுமே நம்மால் எதையும் செய்ய முடியும். தலிபான் தலைமை செயலாளர் கூறியதை இந்த வீடியோவை பாருங்கள். ஆர்எஸ்எஸ் பெருமை பற்றி *முழு வீடியோவையும் கண்டிப்பாக பாருங்கள் தெரியும்.

மதிப்பீடு

விளக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தாலிபான்களின் இந்தியா மீதான நிலை எப்படி இருக்கு என்கிற சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இந்தியாவில் சக்திவாய்ந்தவை என்பதை தாலிபான்கள் ஏற்றுக்கொண்டார்கள் என தாலிபான்களின் தலைமை செயலாளர் பேசுவதாக 11.23 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படம் வீடியோவில் ” NWAA STUDIOS ” எனும் லோகோ இருப்பதை பார்க்க முடிந்தது. அதை வைத்து தேடுகையில், 2020 ஆகஸ்ட் 6-ம் தேதி NWAA STUDIOS யூடியூப் சேனலில் காலித் மெஹ்மூத் அப்பாஸி பேசுவதாக இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ 2019 மார்ச் 1-ம் தேதி பதிவு செய்யப்பட்டதாக வீடியோவில் இடம்பெற்றும் இருக்கிறது.

காலித் மெஹ்மூத் அப்பாஸி உடைய பெயரை வைத்து தேடிப் பார்க்கையில், அவரின் முகநூல் பக்கம் கிடைத்தது. அதில், அவர் பாகிஸ்தான் நாட்டில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய அறிஞர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி ஆகியவை இந்தியாவில் சக்திவாய்ந்தவை என்பதை தாலிபான்கள் ஏற்றுக்கொண்டதாக பரப்பப்படும் வீடியோவில் பேசுபவர் தாலிபான் தலைமை செயலாளரே அல்ல. அந்த வீடியோவில் இருப்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் எனக் கூறப்படும் காலித் மெஹ்மூத் அப்பாஸி என்றும், இவ்வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பாக பேசப்பட்டது என்றும் அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button