சபரிமலை விவகாரத்தில் போலி படங்களை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் கைது!

பரவிய செய்தி

சபரிமலையில் போலீஸ் தாக்கியதாக போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டதாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் கைது.

சுருக்கம்

போட்டோ ஷூட் படங்கள்  என்று குறிப்பிடாமல் பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக படங்களை பதிவேற்றம் செய்ததால் கைது செய்யப்பட்டு பிணையில் வந்துள்ளார்.

விளக்கம்

கேரளாவிலுள்ள செம்பகபள்ளி மன்னார் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குறுப் இவர் சில தினங்களுக்கு முன்னர் சில புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றினார். அந்த புகைப்படத்தில் இருமுடி கட்டி இருக்கும் அவரை காக்கி உடை அணிந்தவர்கள் தாக்குவதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. பலரும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். டெல்லி MLA கபில் மிஸ்ரா “இந்த பக்தரின் பார்வையில் கொடூர தாக்குதலுக்கு பயம் இல்லை, ஒடுக்குமுறைக்கு பயம் இல்லை இதுவே நம்பிக்கையின் சக்தி #sabarimala #Ayyappa ” என ட்வீட் செய்திருந்தார்.


ராஜேஷ் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களை அதை எடுத்த புகைப்பட கலைஞரும் photography வாட்டர்மார்க்கோடு (watermark ) பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அது போல சம்பவம் நடைபெறவில்லை எனவும் சித்திரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது எனவும் தெரியவந்தது. இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (DYFI) சென்னிதல பகுதி செக்கரட்டரி சரத்பாபு  காவல்துறையினரிடம் புகாரளித்தார். ராஜேஷ் கைது செய்யப்பட்டார்.

“அவர் RSS ஆதரவாளர் ஆனால் கட்சியில் எந்த முக்கிய பொறுப்பிலும் இல்லை. இந்திய தண்டனை சட்டத்தின் 153 மற்றும் 500 பிரிவுகளின் கீழும் கேரள போலிஸ் சட்டத்தின் 120 மற்றும் 118 பிரிவுகளின் கீழும் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ராஜேஷ் குறுப் போலி புகைப்படங்களை வெளியிட்டதை ஒப்புக்கொண்டார்.” என மன்னார் வட்ட காவல்துறை ஆய்வாளர் ஜோஸ் மாத்யூ தெரிவித்தார்.

சமீபத்தில் பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பேசிய ஆடியோ லீக் கேரளாவிலுள்ள ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் சபரிமலை விவகாரம்  பா.ஜ.க-வவிற்கு ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த விவகாரத்தில் நாம் எடுத்த அஜெண்டாவிற்கு அனைவரும் சரணடைந்தனர். நாம் அஜெண்டாவை வெற்றி அடைய செய்தோம் . நம் கையில் தான் எல்லாமே இருக்கிறது. சபரிமலை தலைமை தந்திரி என்னுடைய ஆலோசனை பெயரிலேயே கோயில் நடையை சாத்தினார் என பேசி இருந்தார்.

போலியான செய்திகளை பரப்புவதன் மூலமாக அரசாங்கத்தை தாக்குவது மட்டுமில்லாமல் சாதாரண மக்களின் நம்பிக்கையும் உண்மையான பக்தர்களின் உணர்வுகளையும் நொறுக்குகின்றனர். சட்டம் கலவரத்தை தூண்டும் வகையில் போலி செய்திகளை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் நல்லது.

 

Please complete the required fields.
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close