ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் திருக்குறள், தமிழில் பெயர் பலகை உள்ளதா ?

பரவிய செய்தி

உலகிலேயே அணு துளைக்காத ரஷ்யா நாட்டில் அமைந்திருக்கும் கிரெம்ளின் மாளிகையில் இடம்பெற்ற ஒரே தமிழ் நூல் திருக்குறள்.

மதிப்பீடு

விளக்கம்

தமிழ் மொழிக்கும், தொன்மையான தமிழ் நூலான திருக்குறளுக்கும் உலகின் பல நாடுகளில் முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்து இருப்போம். இதில் தமிழுக்கு தொடர்பே இல்லாத நாடான ரஷ்யாவில் உள்ள கிரெம்ளின் மாளிகையின் பெயர் பலகையில் தமிழ் மொழியும், திருக்குறள் புத்தகமும் இடம்பெற்று உள்ளதாக ஓர் தகவல் சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் மற்றும் சில இணையதளங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகை வரலாற்று சிறப்புமிக்கது. 1991-ல் கிரெம்ளின் மாளிகை ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையாக அறிவிக்கப்பட்டு இயங்கி வருகிறது.

Advertisement

கிரெம்ளின் மாளிகையில் உள்ள பெயர் பலகையில் ரஷ்யன், சீனம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் மட்டுமே பெயர் பலகை இருப்பதாகவும், தமிழின் திருக்குறள் நூலை வைத்திருப்பதாக பரவி வரும் தகவலுக்கு ஆதாரங்களை தேடிப் பார்த்தோம். ஆனால், அதிகாரப்பூர்வ தளங்களில் அல்லது செய்திகளில் கூட அப்படி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

2013-ல் wowresorthotels எனும் யூடியூப் சேனலில் வெளியான கிரெம்ளின் மாளிகை பற்றிய வீடியோவில் கிடைத்த பெயர் பலகைகள் மேலே உள்ள புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளன. அடுத்ததாக, கிரெம்ளின் மாளிகையில் திருக்குறள் நூல் இருப்பதாக கூறும் தகவலை தேடினோம். ஆனால், அதை உண்மை என நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. கிரெம்ளின் மாளிகையின் இணையதளம் மற்றும் கிரெம்ளின் அருங்காட்சியம் இணையதளம் எதிலும் தமிழ் குறித்த தகவல் இடம்பெறவில்லை. ஏன் தமிழ் செய்திகளில் கூட அப்படியொரு தகவல்கள் இல்லை.

மாறாக, ” திருவள்ளுவரின் பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ள நேரத்தில், அவரது கம்பீரமான சிலை விரைவில் ரஷ்யாவின் மாஸ்கோவில் இடம்பெறுவதை காணலாம் ” என 2014-ல் தி இந்துவில் வெளியான செய்தி கிடைத்தது.

Advertisement

” திருவள்ளுவர் ஒரு சிறந்த மற்றும் புகழ்பெற்ற கவிஞர். தமிழ் இலக்கியத்தில் அவரது பங்களிப்பை அனைவரும் அறிந்ததே. அவரது சிலையை மாஸ்கோவில் நிறுவுமாறு ஓர் அமைப்பிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. அவரது சிலையை நிறுவ நாங்கள் ஆர்வமாக உள்ளோம் ” என ரஷ்யாவின் துணைத் தூதர் செர்ஜி எல். கோடோவ் தி இந்து செய்திக்கு தெரிவித்து உள்ளார். மேலும், ரஷ்ய கவிஞர் அலெக்ஸாண்டர் புஷ்கின் சிலையை சென்னையில் அமைக்கும் நடவடிக்கையும் உள்ளதாக கூறி இருந்தார்.

தி இந்துவில் வெளியான செய்தியில், ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் தமிழ் பலகை மற்றும் திருக்குறள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. ரஷ்யாவில் தமிழ் நாட்டுப்புற இசை, சினிமா மற்றும் நடனம் ஆகியவை பிரபலம் என கேட்டோவ் கூறியதாக இடம்பெற்று இருக்கிறது. இதன் பிறகு மாஸ்கோவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதா, இல்லையா என்பது தொடர்பான செய்திகள் கிடைக்கவில்லை.

முடிவு : 

நமது தேடலில், ரஷ்யாவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் தமிழில் பெயர் பலகை மற்றும் திருக்குறள் இருப்பதாக கூறும் தகவலுக்கு புகைப்பட ஆதாரமோ அல்லது அதிகாரப்பூர்வ தகவலோ ஏதுமில்லை. வாய்வழியாக கூறப்படும் தகவலே இணையத்தில் அதிகம் உள்ளன. ஆதாரமில்லாத தகவல்களை பகிர வேண்டாம்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close