This article is from May 16, 2020

ரஷ்யாவில் மனிதர்களுக்கு நடத்தப்பட்ட தூக்கப் பரிசோதனை கதை உண்மையா ?

பரவிய செய்தி

ரஷ்யாவின் தூக்க பரிசோதனை.. ஒரு மாசம் தொடர்ந்து தூங்காம இருந்தா என்னவாகும்னு நடந்த பரிசோதையின் முடிவு இது.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

வேற்றுக்கிரகவாசிகள், மர்மமான ஆராய்ச்சிகள் என பதிவிடுபவையே இணையத்தில் பெருமளவில் வைரல் செய்யப்படும். இப்படி பகிரப்படும் பதிவுகள் பலவும் கற்பனையாக உருவாக்கப்பட்டவையாகவோ அல்லது ஆதாரங்கள் இல்லாமல் கூறப்படும் கதையாகவோ இருந்து வருகிறது.

ரஷ்யாவில் மனிதர்களை ஒரு மாதம் தூங்க விடாமல் நடத்திய சோதனையில் அரக்கர்களை போன்ற தோற்றத்திற்கு மாற்றியதாக கருப்பு வெள்ளையில் இருக்கும் புகைப்படம் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கதை இன்று நேற்று அல்ல. கடந்த 2010-ம் ஆண்டில் இருந்தே இணையத்தில் வைரலாகி உள்ளது. ரஷ்யாவில் மனிதர்களுக்கு நடத்திய சோதனையால் இப்படி மாறியதாக வைரலாகும் செய்தி creepypasta wiki எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

” 1940-களின் பிற்பகுதியில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் சோதனை வாயு அடிப்படையிலான தூண்டுதலைப் பயன்படுத்தி 5 பேரை பதினைந்து நாட்கள் விழித்திருக்க வைத்தனர். அவர்களுக்கான ஆக்சிஜன் உட்கொள்ளலை கவனமாக கண்காணிக்க அவை சீல் செய்யப்பட்ட சூழலில் வைக்கப்பட்டன. ஆகையால், அதிக செறிவுகளில் நச்சுத்தன்மை இருந்தும் வாயு அவர்களை கொல்லவில்லை. இது மூடிய சர்க்யூட் கேமராக்களுக்கு முன்பே இருந்தது, எனவே அவர்களை கண்காணிக்க அறைக்குள் மைக்ரோஃபோன்கள் மற்றும் 5 அங்குல தடிமனான கண்ணாடி போர்ட்ஹோல் அளவிலான ஜன்னல்கள் மட்டுமே இருந்தன ” என creepypasta wiki நீண்டக் கட்டுரையாக 2010-ல் வெளியாகி இருந்தது.

ஆனால், இக்கதைக்கு சொந்தக்காரர் creepypasta wiki இணையதளம் இல்லை. கட்டுரையின் இறுதியில் ” original author Unknown ” எனக் குறிப்பிட்டு இருந்தனர். creepypasta wiki இணையதளத்தில் வெளியிட்ட கதைக்கு ஆதாரங்களோ அல்லது தரவுகளோ என ஏதும் அளிக்கவில்லை.

creepypasta வாசகர்களை உறைய வைக்கும் மற்றும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறுகதைகளின் தளம். 2010-ல் creepypasta wiki தளத்தில் இக்கதை வெளியான பின்னரே இணையத்தில் பரவலான பார்வையை பெற்றது. ரஷ்யாவின் தூக்கப் பரிசோதனை என பரவும் கதை இயற்கைக்கு அப்பாற்பட்ட புனையப்பப்ட்ட கதையே (Supernatural Fiction Story).

2016-ல் News.com எனும் இணையதளத்தில் creepypasta வெளியிட்ட ரஷ்ய ஆராய்ச்சி குறித்து வெளியிட்டு இருந்தனர். அதில், இணையத்தில் வைரலாகும் கற்பனை கதைக்கு என்னவெல்லாம் பயன்படுத்த வேண்டும் என கிண்டல் செய்யும் பாணியில் வெளியிட்டு இருந்தனர். ” Russian Sleep Experiment ” என தேடினால் இப்புகைப்படமே அதிகம் கிடைக்கும். ஆனால், இப்புகைப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்ட என்பதற்காக தரவுகள் இல்லை.

Facebook | archive link

2 ஆண்டுகளுக்கு முன்பு யூடர்ன் முகநூல் பக்கத்தில் ” ரஷ்யாவின் தூக்கப் பரிசோதனை ” என பரவிய புகைப்படம் போலியானது என மீம்ஸ் வெளியிட்டு இருந்தோம். பல ஆண்டுகளாக இணையத்தில் கற்பனை கதைகள் மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் போலியான புகைப்படங்கள் ஏராளமாய் குவிந்து இருக்கின்றன. அவற்றை உண்மை என நினைத்து அதிர்ச்சி அடைய வேண்டாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader