உக்ரைனுக்கு செல்லும் ரஷ்ய போர் ஆயுதங்கள் எனப் பரவும் வீடியோ உண்மையா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்காக ரயிலில் பீரங்கிகள் மற்றும் போர் ஆயுதங்கள் எடுத்துச் செல்லும் காட்சி என 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உக்ரைனை நோக்கி செல்லும் ரஷ்ய பீரங்கிகளும் போர் ஆயுதங்களும் .https://t.co/qP1T2egJeHhttps://t.co/qP1T2egJeH pic.twitter.com/Ahu8P7KExw
— உலக நட்பு . (@MurugesanKr2) March 7, 2022
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2012 ஆகஸ்ட் மாதம் astro955 என்ற யூடியூப் சேனலில் ” CN 2235, CN 8803 – Ultra Rare Canadian Military Train – Westbound – Lovekin, ON ” எனும் தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
வீடியோவின் தலைப்பில் கூறப்பட்டுள்ள லோவேக்ன் எனும் பகுதி கனடா நாட்டின் ஒன்டாரியோவில் அமைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக கனடா நாட்டைக் குறிப்பிட்டு வெளியான வீடியோவை தற்போதைய உக்ரைன் -ரஷ்யா போருடன் இணைத்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக பரவும் தவறான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் !
மேலும் படிக்க : போர் சூழலில் இந்திய விமானம் மட்டும் தைரியமாக உக்ரைனுக்கு சென்றதா ?
இதற்கு முன்பாக, உக்ரைன்-ரஷ்யா போரை மையப்படுத்தி பல தவறான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பரப்பப்பட்டதை நாம் முறியடித்து இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், உக்ரைனை நோக்கி செல்லும் ரஷ்ய பீரங்கிகளும் போர் ஆயுதங்களும் எனப் பரவும் வீடியோ தவறானது. அது 10 ஆண்டுகளுக்கு முன்பாக கனடா நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.