This article is from Oct 20, 2018

சபரிமலை விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறியதென்ன ?

பரவிய செய்தி

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கின்றேன். அதே நேரத்தில் ஜதீகத்தை பின்பற்ற வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த்

மதிப்பீடு

விளக்கம்

பேட்ட திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் சபரிமலை ஐயப்பன் விவகாரம், #metoo விவகாரம் உள்ளிட்ட பல கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற விவகாரத்தில் போராட்டங்கள் எழுவது குறித்த கேள்விக்கு,  சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கின்றேன். அதே நேரத்தில் ஜதீகத்தை பின்பற்ற வேண்டும் என கூறியதாக செய்தி வெளியானதால் சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் பற்றி மீம் பதிவுகள் அதிகம் வைரலாகி வருகிறது.

செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் ரஜினிகாந்தின் பதிலை விரிவாக காண்போம்.

நிரூபர் : ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து ?

ரஜினிகாந்த் : பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும், கோவில் என்று சொல்லும் பொழுது ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சடங்கு இருக்கும், ஐதீகங்கள் இருக்கும். அதில், யாரும் தலையிடக் கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.

நிரூபர் : உச்ச நீதிமன்ற தீர்ப்பு உதாசீனப்படுத்தப்படுகிறதா ?

ரஜினிகாந்த் :  அப்படி கிடையாது. மதிக்க வேண்டும். கொஞ்சம் இம்மாதிரியான மதம் சார்ந்த விசயங்கள், சடங்குகள் சம்பந்தப்பட்ட விசயங்களில் கொஞ்சம் பார்த்து செய்தால் நல்லா இருக்கும்.

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கின்றேன் என ரஜினிகாந்த் கூறவில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader