சச்சின் பெயரில் உலாவும் நையாண்டி ட்விட்டர் கணக்கின் கிண்டல் பதிவு !

பரவிய செய்தி
பாஜக தொண்டர்களை கலாய்த்த டெண்டுல்கர் ! உபியில் 3000 டன் தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாஜக , ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தெரிவித்தனர். இதனை புவியியல் துறை மறுத்தது. இது குறித்து சச்சின் டெண்டுல்கர் ” இந்த 3000 டன் தங்க சுரங்கத்தை என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு பிடித்தது ரூ 2000 நோட்டில் சிப் இருந்தது தான் ” என்று கலைத்துள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில், ” உத்தரப் பிரதேசத்தில் 3000 டன் தங்கம் கண்டுபிடித்தது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் எனக்கு பிடித்தது 2000 ரூபாய் நோட்டில் நனோ-ஜிபிஎஸ் சிப் கண்டுபிடித்தது ” என சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் 3000 டன் தங்கம் கிடைத்ததாக வைரலான வதந்தி உடன் 2000 ரூபாய் நோட்டில் நனோ ஜிபிஎஸ் சிப் இருப்பதாக கூறப்பட்ட வதந்தியை இணைத்து வெளியான ட்வீட் உடைய ஸ்க்ரீன்ஷார்ட் பரவி வருகிறது.
அந்த ட்விட்டர் பக்கம் சச்சின் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமே இல்லை, நையாண்டி ட்விட்டர் பக்கம் என அதன் பெயரையும்(Trendulkar), புகைப்படத்தையும் பார்த்தாலே தெளிவாய் தெரிகிறது. ஆனால், அதை பார்ப்பவர்களும், பகிர்பவர்களுக்கு உண்மையான பக்கம் என்றே நினைத்து வருகிறார்கள்.
மேலும், Javith news pallapatti & delhi செய்திகள் என்ற பெயரில் சச்சின் உடைய ட்வீட் என அந்த ஸ்க்ரீன்ஷார்டை தமிழில் வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பி வருகிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. சச்சின் பெயரில் பரவி வரும் தவறான வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவலை கண்டால் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மேற்காணும் புகைப்படத்தில் இருக்கும் ட்விட்டர் பக்கமே முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம். சச்சின் பெயரில் மட்டுமில்லை, 2019 நவம்பரில் அவரின் மகன் மற்றும் மகளின் பெயர்களிலும் போலியான ட்விட்டர் கணக்குகள் இருப்பதாக சச்சின் வெளியிட்ட ட்வீட் செய்தியாய் வெளியாகி இருக்கின்றன.
I wish to clarify that my son Arjun & daughter Sara are not on Twitter.
The account @jr_tendulkar is wrongfully impersonating Arjun and posting malicious tweets against personalities & institutions. Requesting @TwitterIndia to act on this as soon as possible.— Sachin Tendulkar (@sachin_rt) November 27, 2019
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.