சேலம் 8 வழிச் சாலையை அனுமதிக்க தருமபுரி எம்பி கோரிக்கையா ?

பரவிய செய்தி
சேலம் வழியே 8 வழிச் சாலை அமைத்தே தீர வேண்டும் நிதின் கட்கரியிடம் நேரில் சந்தித்து திமுக எம்பி செந்தில்குமார் மனு. திமுகவால் மக்கள் திருப்தி.
மதிப்பீடு
விளக்கம்
சென்னை- சேலம் வரையிலான 8 வழிச் சாலை அமைக்கப்படக் கூடாது என எதிர்ப்புகளை தெரிவித்த திமுக கட்சியின் தருமபுரி எம்பி செந்தில் குமார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து சேலம் 8 வழிச் சாலையை அமைத்தே தீர வேண்டும் என்ற கோரிக்கையை வழங்கியதாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சேலம் 8 வழிச் சாலை தொடர்பாக எம்பி செந்தில் குமார் கோரிக்கை அளிக்கும் புகைப்படத்துடன் இருக்கும் நியூஸ் கார்டு ஒன்றை யூடர்ன் ஃபாலோயர் பகிர்ந்து இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, எம்பி செந்தில் குமார் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை அமைத்திட தருமபுரி தொகுதி எம்பி செந்தில் குமார் மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கையை வைத்தாக முதன்மை ஊடகங்களில் வெளியாகவில்லை. மேலும், பரவி வரும் நியூஸ் கார்டில் எந்தவொரு சேனலின் லோகோவும் இல்லை, போட்டோஷாப் செய்தவை என அறிந்து கொள்ள முடிந்தது.
Met Minister Thiru Nitin regarding #8waylane Krishnagir.
Dharmapuri-Thoppur-Salem.#4waylane Thopput-Bhavani.#Flyover at Pudur Karimangalam n Gundalpatti#Pilot_project to plant trees in centre median of NHAI in Dpi.
All demands accepted n he suggested Eucalyptus trees.😊 pic.twitter.com/yHQ2bmUikq— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 23, 2019
அடுத்ததாக, எம்பி செந்தில் குமார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடனான சந்திப்பு நிகழ்ந்ததா என்றால், ஆம் சமீபத்தில் அப்படியொரு சந்திப்பு நிகழ்ந்து உள்ளது. அதுவும் சேலம் 8 வழிச் சாலை அமைப்பது தொடர்பாகத்தான். ஆனால், தமிழக அரசு கொண்டு வந்த சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டமல்ல. சேலம்-பெங்களூர் வரையிலான 8 வழிச் சாலை திட்டம்.
தன்னுடைய கோரிக்கை சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டதாகக் கூறி தவறாக பரவி வருவதாக எம்.பி செந்தில் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Letter copy of 8 lane expansion of existing 4 lane Krishnagiri-Dharmapuri-Thoppur-Salem given to Road and Highways Minister Thiru Nitin.This lane has increased congestion of traffic esp lorry traffic as this serves as gateway to Kerala and Karnataka and has very high fatalities. pic.twitter.com/WPMZNgIDvl
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 25, 2019
கிருஷ்ணகிரி, தருமபுரி, தொப்பூர், சேலம் வரையிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுப்படுத்தும் கோரிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அளித்து உள்ளதாக செப்டம்பர் 23-ம் தேதி அளித்த கோரிக்கை மனுவையும் ட்விட்டரில் எம்பி செந்தில் குமார் பதிவிட்டு இருக்கிறார்.
” கன்னியாகுமரி-டெல்லி வழியிலான தேசிய நெடுஞ்சாலை 44-ல் தருமபுரி, தொப்பூர், சேலம் இடையே உள்ள சாலையில் அதிக வளைவுகள் இருப்பதால் விபத்துக்கள் அதிகமா நிகழ்கின்றன. எனவே, விபத்துக்களை தவிர்க்க கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, தொப்பூர் வழியாக சேலம் வரையில் இருக்கும் நான்கு வழிச் சாலையை 8 வழிச் சாலையாக விரிவுப்படுத்துமாறும், இதனால் விபத்துக்கள் குறையும் ” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 25, 2019
தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் சேலம்-கிருஷ்ணகிரி நான்கு வழிச் சாலையை 8 வழிச் சாலையாக விரிவுப்படுத்த கோரிக்கை அளித்ததாக வெளியாகி இருக்கிறது. மேலும், குண்டல்பட்டி, காரிமங்கலம் மற்றும் பாளையம் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கவும் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள செண்டர் மீடியன்களில் ” யூகலிப்டஸ் ” மரங்களை சோதனை முறையில் தருமபுரி நெடுஞ்சாலைப் பகுதியில் நடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. இதுவும் தருமபுரி எம்பி செந்தில் குமாரின் கோரிக்கைகளில் ஒன்றாகும்.
ஜூலை 2019-ல் சேலம்-சென்னை வரையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிடுமாறு திமுக எம்பிக்கள் குழு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பொழுது, தருமபுரி எம்பி செந்தில் குமாரும் உடன் இருந்துள்ளார்.
முடிவு :
நமக்கு கிடைத்த தகவலின் படி, தருமபுரி எம்பி செந்தில் குமார் மத்திய அமைச்சர் நிதியமைச்சர் நிதின் கட்கரி சந்திப்பில் சேலம்-கிருஷ்ணகிரி நான்கு வழிச் சாலையை 8 வழிச் சாலையாக மாற்றவே கோரிக்கை அளித்துள்ளார்.
சேலம்-கிருஷ்ணகிரி சாலைக்காக அளித்த கோரிக்கையை சேலம்-சென்னை 8 வழிச் சாலைக்காக அளித்து உள்ளதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. இதனை எம்பி செந்தில் குமாரும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.