சலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா ?| காவல்துறை மறுப்பு.

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஏப்ரல் 14-ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு பின்னர் நேர நிர்ணயம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் சலூன் கடைகளை காலை 7 மணி முதல் 10 மணி வரையில் திறந்து வைக்க அரசு அனுமதி அளித்து உள்ளதாக செய்திகளில் வெளியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்படி வெளியான தகவலுக்கு காவல்துறை தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சலூன் கடைகளை காலை 7 மணி முதல் 10 மணி வரை திறந்து வைக்க எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
ஏற்கனவே ரேசன் கடைகளில் வழங்கப்படும் 1000 ரூபாய் மற்றும் ரேசன் பொருட்களுக்கு மக்கள் கூட்டமாய் அடித்து பிடித்து செல்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், சலூன் கடைகளை திறந்தால் ஆண்களின் கூட்டம் அதிகம் வர வாய்ப்புகள் இருக்கின்றன.
இதேபோல், மருத்துவமனைக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லக் கூடாது, ஆம்புலன்ஸ் மூலமே செல்ல வேண்டும் என செய்திகளில் வெளியான தகவலையும் காவல்துறை மறுத்துள்ளனர். அரசின் உத்தரவுகள் உரிய முறையில் வெளியாகும், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என காவல்துறை தெரிவித்து உள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.