சாரா டெண்டுல்கர் பெயரில் இயங்கும் போலி ட்விட்டர் பக்கத்தின் பதிவை வைத்து செய்தி வெளியிட்ட தந்தி டிவி !

பரவிய செய்தி
இன்று மேட்ச்… My Man எனக் குறிப்பிட்டு சுப்மன் கில்லுக்கு சாரா டெண்டுல்கர் வாழ்த்து..
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டி இன்று மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் My Man எனக் குறிப்பிட்டு கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு சாரா டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்ததாகக் கூறி தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இதனை சமூக ஊடகங்களில் பலரும் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
மேலும் இதற்கு முன்பும் இதே போன்று மாலை மலர் தமிழ், சாரா டெண்டுல்கர் சுப்மன்கில்லுக்கு முத்தத்துடன் வாழ்த்து தெரிவித்தாகக் கூறி அவருடைய எக்ஸ் வலைத்தளப்பதிவு குறித்து கடந்த நவம்பர் ௦8 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் சாரா டெண்டுல்கரின் எக்ஸ் பதிவுகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது அவருடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
Match Day. Hope IND wins ❤️🔥 Play well My Man #ShubmanGill 🇮🇳💙#INDvsNZ pic.twitter.com/deLSufvzb5
— Sara Tendulkar (@SaraTendulkar__) November 15, 2023
மேலும் கடந்த 2019 அக்டோபர் முதல் சாரா டெண்டுல்கர் பெயரில் செயல்பட்டு வரும் அந்தப் எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் Parody என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.
இதன் மூலம் பரவி வரும் பதிவு, அவருடைய பெயரில் இயங்கும் போலியான எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டது என்பதை உறுதிபடுத்த முடிகிறது. இதனை பலரும் உண்மை என்று நம்பி சமூக ஊடகங்களில் தவறாக பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்திற்கு சத்ரு சம்ஹார யாகமே காரணம் என வைரலாகும் நையாண்டிப் பதிவு !
மேலும் படிக்க: ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !
முடிவு:
நம் தேடலில், இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்காக சுப்மன் கில்லை My Man என்றுக் குறிப்பிட்டு சாரா டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்ததாக தந்தி டிவி வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பதை அறிய முடிகிறது.